நோக்கியா ஆஷா 501 பட்ஜெட் போன் சிறப்பு விமர்சனங்கள்!!!

|

இந்தியாவில் நடுத்திர மக்கள் அதிகம் விரும்பும் மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக நோக்கியா விளங்குகிறது. பட்ஜெட் போன்களை வாங்க விரும்பும் மக்கள் மத்தியில் நோக்கியாவின் ஆஷா மாடல் போன்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

நோக்கியா நிறுவனம் சில வாரங்களுக்கு முன் தனது ஆஷா மாடலில் மேலும் ஒரு புதிய படைப்பாக ஆஷா 501 எனும் பட்ஜெட் போனை வெளியிட்டது. நோக்கியா ஆஷா 501 புதிதாக ஆஷா ஓஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது டியுல் சிம், சிங்கிள் சிம் என இரண்டு வெர்ஷன்களிலும் கிடைக்கிறது.

ரூ.5000க்கும் அதற்க்கும் கம்மியான விலைகளிலும் நோக்கியா ஆஷா 501 விற்பனை ஆகி வருகிறது . ஆன்லைன்களில் ஆஷா501 குறைந்த விலையில் விற்பனை ஆகி வருகிறது. மக்களிடையே வேகமாக பிரபலமாகும் நோக்கியா ஆஷா 501யை நமது ஹிஸ்பாட் அணியினர் சில நாட்களாக பயன்படுத்தி அதன் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளை நம்மிடையே அதை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பாரப்போம்.

நோக்கியா ஆஷா 501 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

 நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501 ஹேன்ட்செட்
நோக்கியா சார்ஜர்
ஹெட்போன்
4ஜிபி மைக்கிரோ எஸ்டி கார்டு
யுஎஸ்பி கேபிள்

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501 சிகப்பு, ஆரஞ், மஞ்சள் என ஆறு வகையான வண்ணங்களில் வருகிறது. நமது அணியினர் பயன்படுத்தியது மஞ்சள் நிறமாகும்.

இதன் டிஸைன் மிகவும் அழகாக , போன் கைகளுக்கு அடக்கமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸைன் லூமியா மொபைல்களை போன்று கொஞ்சம் உள்ளது. இதன் எடை 90 கிராம்தான். இதை ஒரு வெயிட்லெஸ் மொபைல் என்றே சொல்லலாம்.

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501ல் மைக்கிரோ யுஎஸ்பி போர்ட் உள்ளது. டிஸ்பிளே ஸ்கிரீனுக்கு கீழ் அப்ளிகேஷனுக்கு செல்ல ஒரு பட்டன் உள்ளது.

போனின் சைடு பகுதியில் வால்யூம் பட்டன்கள் மற்றும் சைடு பட்டன் உள்ளன.

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501 3இன்ஞ் TFT டச் ஸ்கிரீனை கொண்டுள்ளது. இதன் டச் சென்ஸ்டிவிட்டி நன்றாக தான் உள்ளது. ஸ்கிரீன் சைஸ் சிறியதாக உள்ளதால் ஒரு சில நேரங்களில் டைப் செய்வதற்க்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த விலையில் இருக்கும் போனில் இதை விட நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

இதன் பின்பகுதியில் திறந்த பார்த்தால் நோக்கியா சிம் கார்டு ஸ்லாட் மற்றும் மைக்கிரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.

நோக்கியா ஆஷா 501 128எம்பி இன்டர்னல் மெமரி மற்றும் 32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி கொண்டுள்ளது

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

இதில் நோக்கியா ஆஷா 1.0 ஓஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓஎஸ் டிஸைன் பார்ப்பதற்க்கு லூமியா விண்டோஸ் ஓஎஸ்யை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.

நோக்கியா ஆஷா 501வில் ஆச்சரிய படும் வகையில் இரண்டு ஹோம் ஸ்கிரீன் உள்ளது. முதல் அப்ளிகேஷன்கள் உள்ளன. இரண்டாவது ஹோம் ஸ்கிரீனில் நாம் கடைசியாக பார்த்த அப்ளிகேஷன் போனில் செய்த ஆக்டிவிட்டி போன்றவைகள் உள்ளன.

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501ல் பேஸ்புக், டிவிட்டர் போன்ற பல பிரபலமான அப்ளிகேஷன்கள் பிரீ லோடெட்டாக வருகின்றன. மியூசிக் பிளேயர், காலண்ட்ர், பையில் மேனஜர் போன்ற அப்ளிகேஷன்களும்.

இதில் ஏமாற்றம் அளிக்கும் விஷியம் என்னவென்றால் வாட்ஸ் ஆப்பை நாம் பயன்படுத்த முடியாது. ஆனால் வீ சாட்டை பயன்படுத்தலாம் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

எதிர்பார்தது போலவே இதன் கேமரா நன்றாக தான் உள்ளது. இதில் 3x ஜும் வசதி உள்ளது. இதில் பிளாஷ் லைட் இல்லை அதனால் வெளிச்சம் கம்மியாக இருக்கும் இடத்தில் போட்டோ எடுத்தால் சரியாக இருக்காது

 நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501



நோக்கியா ஆஷா 501 2ஜி போன் ஆகும். இதில் நோக்கியா எக்ஸ்பிரஸ் என்ற பிரௌஸர் உள்ளது. இந்த பிரௌஸரில் மொபைல் வெப்சைட்கள் நன்றாக இயங்குகின்றன. இதில் உள்ள இ-மெயில் கிளைன்ட் கூகுள், யாஹூ, ஹாட்மெயில் போன்றவைகளை சப்போர்ட் செய்கிறது.

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

இதில் wi-fi மற்றும் புளுடூத் கனெக்டிவிட்டி உள்ளது. நோக்கியா ஆஷா 501ல் FM ரேடியோ உள்ளது இதை நீங்கள் ஹெட்போனை வைத்து பயன்படுத்தலாம்.

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501ல் 64எம்பி ராம் உள்ளது. இதில் பிராசஸர் என்று எதுவும். இதன் இயக்கம் நன்றாக தான் உள்ளது. ஆஷா 501 தடங்கள் இல்லாமல் சிறப்பாக இயங்குகிறது.

இதில் 1200mAh பேட்டரி உள்ளது. இது 20மணி நேரம் டாக்டைம் திறன் கொண்டுள்ளது என நமது அணியினிர் தெரிவித்தனர்.

 நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

நிறை

அழகிய டிஸைன்
பேட்டரி
பிரௌஸர்
ஆஷா ஓஎஸ்
ஸ்பீக்கர்
டியுல் சிம்

குறை

ஆப்ளிகேஷன்ஸ்
டைப் செய்ய வசதியாக இல்லாதது.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X