கலக்கும் ஆஷா 500...!

Written By:

தற்போதுமொபைல் போன் விற்பனை மையங்களில், இன்னும் விற்பனைக்கு வராத நோக்கியா ஆஷா 500 போன், இணைய தளங்களில் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இணைய தள விற்பனை விலை ரூ.4,649. தற்போதைக்கு கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த போன், விற்பனை பரவலாக்கப் படுகையில் மேலும் நான்கு வண்ணங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100.3 x 58.1 x 12.8 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போனின் எடை 101 கிராம். இதன் 2.8 அங்குல வண்ணத்திரை, எல்.சி.டி. ட்ரான்ஸ்ப்ளெக்டிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது.

இந்த டிஸ்பிளேயில், அக்ஸிலரோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் தரப்பட்டுள்ளது.

இதில் இயங்குவது நோக்கியா ஆஷாசாப்ட்வேர் 1.1.1. இந்த போனில், சில பாதுகாப்பு வசதிகள் பதியப்பட்டே கிடைக்கின்றன.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

கலக்கும் ஆஷா 500...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இதனை இணையத் தொடர்பிற்கு எளிதாகப் பயன்படுத்தி, பேஸ்புக், வாட்ஸ் அப், வி சேட் போன்றவற்றின் மூலம் நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கலாம்.

இரண்டு சிம் இயக்கமும், 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இதன் மற்ற சிறப்புகளாகும். இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 14 மணி நேரம் பேசுவதற்கான திறனை அளிக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot