நோக்கியா மற்றும் எல்ஜி போன்கள் ஒப்பீடு!

By Super
|

நோக்கியா மற்றும் எல்ஜி போன்கள் ஒப்பீடு!
நிறைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இதில் நோக்கியாவின் ஆஷா-311 மற்றும் எல்ஜி எல்-3 இ-400 ஸ்மார்ட்போன் பற்றிய சில ஒப்பீ்ட்டினை பார்க்கலாம்.

நோக்கியா ஆஷா-311 ஸ்மார்ட்போன் 3.0 டிஎப்டி திரை தொழில் நுட்ப வசதியினை பெற்று வருகிறது. இந்த திரையின் மூலம் 240 X 400 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக பெறலாம். ஆஷா-311 ஸ்மார்ட்போனின் திரையினை விட, எல்ஜி எல்-3 இ-400 ஸ்மார்ட்போனின் திரை சற்று பெரியதாக இருக்கும். இதில் 3.2 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போனின் இயங்குதளங்களும் வேறுபடுகிறது. ஆஷா-311 ஸ்மார்ட்போன் சிம்பையான் இயங்குதளத்திலும், எல்-3 இ-400 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3.6 ஸ்மார்ட்போன் இயங்குதளத்திலும் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன்களில் டியூவல் கேமரா வசதி கொடுக்கப்படவி்ல்லை.

ஆஷா-311 மற்றும் எல்-3 இ-400 ஆகிய இந்த போன்களில் 3.15 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 2048x1536 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை வழங்கும். எல்ஜி ஸ்மார்ட்போனில் 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 2ஜி வசதிக்கு 600 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 3ஜி வசதிக்கு 600 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும்.

ஆஷா-311 போனில் உள்ள 1110 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி 2ஜி வசதிக்கு 696 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 3ஜி வசதிக்கும் 768 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். இந்த போனில் 2ஜி நெட்வொர்கிற்கு 14 மணி நேரம் டாக் டைம் மற்றும் 3ஜி வசதிக்கு 6 மணி நேரம் டாக் டைம் வசதியினை வழங்கும்.

எல்ஜி எல்-3 இ-400 போன் 12 மணி நேரம் 30 நிமிடங்கள் டாக் டைமை 2ஜி நெட்வொர்க் வசதிக்கும், 10 மணி நேரம் 3ஜி வசதிக்கும் அளிக்கும். இத்தகைய தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் இந்த போன்களின் விலையையும் தெரிந்து கொள்ளலாம். எல்ஜி எல்-3 இ-400 ஸ்மார்ட்போன் ரூ.6,559 விலையினையும் மற்றும் நோக்கியா ஆஷா-311 போனை ரூ.7,299 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X