Home
Mobile

நோக்கியா ஆஷா 308 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஒய் டூவோஸ் லைட் ஒரு ஒப்பீடு

By Karthikeyan
நோக்கியா ஆஷா 308 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஒய் டூவோஸ் லைட் ஒரு ஒப்பீடு

எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி. அது டூவல் சிம் போனாக இருந்தால் போதும். அது கண்டிப்பாக இந்திய மொபைல் சந்தையில் நன்றாக விற்பனை ஆகும். அந்த அளவிற்கு டூவல் சிம் போன்களுக்கு இந்திய சந்தையில் பெரிய வரவேற்பு இருக்கிறது.

அந்த வகையில் நோக்கியா நிறுவனம் ஆஷா 308 என்ற போனை ரூ.5,685 ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. அதுபோல் சாம்சங் நிறுவனமும் கேலக்ஸி ஒய் டூவோஸ் லைட் என்ற ஆன்ட்ராய்டு போனை ரூ.6,790க்கு விற்று வருகிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஏறக்குறைய சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆஷா போன் 3 இன்ச் அளவிலான கப்பாசிட்டிவ் மல்டி பாயிண்ட் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கேலக்ஸி போன் 2.8 இன்ச் அளவிலான கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. இரண்டு டிஸ்ப்ளேகளும் மிகத் துல்லியமாக இருக்கின்றன.

ப்ராசஸரைப் பொருத்தவரை ஆஷா போன் 800 மெகா ஹெர்ட்சையும், கேலக்ஸி 832 மெஹா ஹெர்ட்சையும் கொண்டிருக்கிறது. அதுபோல் ஆஷா போன் நோக்கியா வரிசை 40 இயங்கு தளத்தையும் மற்றும் கேலக்ஸி போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தையும் கொண்டிருக்கிறது.

அப்ளிகேசன்களைப் பொருத்தவரை ஆஷா போன், மெசேஜிங், இன்டர்நெட் ப்ரவுசர், இமேஜ் வியூவர், கேமரா, மியூசிக் ப்ளேயர், வாய்ஸ் ரிக்கார்டர், எப்எம் ரேடியோ போன்றவற்றைக் கொண்டிருக்கின்றது.

கேமராவைப் பொருத்தவரை இரண்டு போன்களும் 2எம்பி பின் பக்கக் கேமராக்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இரண்டுமே முகப்புக் கேமராக்களைக் கொண்டிருக்கவில்லை. ஆஷா 20எம்பி சேமிப்பையும் கேலக்ஸி போன் 2ஜிபி சேமிப்பையும் கொண்டிருக்கின்றன. இரண்டு போன்களிலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் அதன் சேமிப்பை 32ஜிபி வரை விரிவு செய்ய முடியும்.

இணைப்பு வசதிகளுக்காக ஆஷா போன், ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கேலக்ஸி போன் மைக்ரோ யுஎஸ்பி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

இரண்டு போன்களும் மலிவு விலையில் வந்தாலும் அம்சமானஅப்ளிகேசன்களுடன் வருகின்றன. குறிப்பாக ஆஷா போன், எக்ஸ்ப்ரஸ் ப்ரவுசர், நோக்கியா நியர்பை, நோக்கியா லைப்+, நோக்கியா மேப்ஸ், 40 பிரிமியம் எஇ கேம்ஸ், பேஸ்புக், டுவிட்டர், நோக்கியா மெசேஜிங் சர்வீஸ் மற்றும் யுடியூப் போன்ற அப்ளிகேசன்களைக் கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில் கேலக்ஸி ஒய் போன், சாட் ஆன், கூகுள் சேர்ச், ப்ளே ஸ்டோர், கூகுள் லாட்டிடியூட், கூகுள் டாக், ஜிமெயில், கூகுள்+, யுடியுப், சாம்சங் அப்ளிகேசன்கள், சோஷியல் ஹப், மெசன்ஜர், இன்ஸ்டன்ட் மெசேஜிங் மற்றும் சாம்சங் கீஸ் இணைப்பு போன்ற ஏராளமான அப்ளிகேசன்களை கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் இரண்டு போன்களுமே மலிவு விலையில் வருகின்றன. அதே நேரத்தில் சூப்பரான வசதிகளுடன் வருகின்றன. இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X