இந்தியாவில் ஆஷா 308 மற்றும் ஆஷா 309

இரண்டு போன்களும் ஏறக்குறைய சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. எனினும் ஒரே ஒரு சிறிய வேறுபாடு மட்டுமே இந்த இரண்டு போன்களுக்கு இடையில் உள்ளது.
அதாவது ஆஷா 308 போன் டூவல் சிம் வசதியுடன் வருகிறது. ஆனால் ஆஷா 309 சிங்கிள் சிம் வசதியுடன் மட்டுமே வருகிறது. ஆனால் இந்த ஆஷா 309ல் வைபை வசதி உள்ளது. இந்த இரண்டு போன்களும் எஸ்40 இயங்கு தளத்தில் இயங்குகின்றன.
இந்த இரண்டு போன்களும் 3 இன்ச் அளவில் டபுள்யுக்யுவிஜிஎ டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு டிஸ்ப்ளேகளும் மிகவும் துல்லியமாக இருக்கும் என்று நம்பலாம். ஆஷா 308ல் சிம் ஸ்வாப் தொழில் நுட்பம் உள்ளதால் இதில் இருக்கும் இரண்டு சிம்களையும் சரியாகக் கையாள முடியும்.
மேலும் இந்த இரண்டு போன்களும் நோக்கியா மேப்ஸ், நோக்கியா எக்ஸ்ப்ரஸ் ப்ராவுசர் போன்ற அப்ளிகேசன்களுடன் வருகின்றன. மேலும் இந்த போன்களில் இஎ ஸ்போர்ட்சில் இருந்து 40 கேம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications