Home
Mobile

ஆஷா-305 மொபைல் சிறப்பு கண்ணோட்டம்!

By Super

ஆஷா-305 மொபைல் சிறப்பு கண்ணோட்டம்!
ஆஷா வரிசை மொபைல்களில் புதிய ஆஷா-305 என்ற மொபைலை வெளியிட்டது நோக்கியா நிறுவனம். மொத்தத்தில் ஆஷா வரிசை மொபைல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வவேற்பு பெற்ற மொபைல்கள் தான். இதனால் புதிதாக வெளியிட்டுள்ள ஆஷா-305 மொபைலை பற்றி ஒரு சிறப்பு கண்ணோட்டம் பார்க்கலாம்.

வாங்கும் மொபைல் எதுவாக இருப்பினும், அந்த மொபைலின் திரை வசதி அகன்றதாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்பது வழக்கம் தான். இந்த ஆஷா-305 மொபைலில் உள்ள 3 இஞ்ச் திரை வசதி, வாடிக்கையாளர்களுக்கு திரை வசதியை பொருத்த விஷயத்தில் திருப்தியை அளிக்கும். இதன் திரை வசதி மூலம் 240 X 400 திரை துல்லியத்தினையும் பெற முடியும்.

2 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற்றாலும், இன்னும் கொஞ்சம் அதிக பிக்ஸல் கொண்ட கேமராவினை வழங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த மொபைலில் முகப்பு கேமராவும் கொடுக்கப்படவில்லை.

சிறப்பாக ஜிபிஆர்எஸ் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் எஸ்எம்எஸ், இ-மெயில் போன்ற சவுகரியங்களை இருந்த இடத்தில் இருந்தே பெற முடியும். 2ஜிபி மெமரி ஸ்லாட் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில், 32ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள முடியும்.

அடுத்ததாக சொல்ல வேண்டும் என்றால் இந்த மொபைலில் உள்ள பேட்டரி வசதி தான். இதில் லித்தியம் அயான் பேட்டரி வசதி உள்ளதால் 14 மணி நேரம் டாக் டைம் மற்றும் 528 மணி நேரம் ஸ்டான்-பை டைம் போன்ற வசதிகளையும் எளிதாக பெற முடியும்.

நோக்கியாவின் இந்த ஆஷா-305 மொபைலை ரூ. 5, 029 விலையில் பெற முடியும். இன்டர்நெட் வசதியில் இருந்து, நிறைய பொழுதுபோக்கு வசதிகள் வரை சப்போர்ட் செய்ய உதவும் இந்த மொபைலின் விலை வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்க முடியும் ஒரு தொகையாக தான் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X