பேஷ் பேஷ்... வசதிகளுடன் நோக்கியாவின் ஆஷா மொபைல்கள்!

By Super
|

பேஷ் பேஷ்... வசதிகளுடன் நோக்கியாவின் ஆஷா மொபைல்கள்!
ஒரே நிறுவனம் பலவிதமான சிரீஸ்களிஸ் மொபைல்களை வெளியிடுகின்றன. இதில் நோக்கியாவின் ஆஷா சிரீஸ் மொபைல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒன்று. ஆஷா-303 மற்றும் ஆஷா-300 என்ற இந்த இரண்டு மொபைல்களும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த எளிதாக இருக்கும் மொபைல்கள்.

நோக்கியா-300 மொபைல் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இது 2.4 இஞ்ச் அகன்ற டிஎப்டி தொடுதிரை வசதி கொண்ட மொபைல். இன்னொரு மொபைலான ஆஷா-303 மொபைல் 2.6 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைல். இதில் 320 X 240 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும்.

ஆஷா-300 மற்றும் ஆஷா-303 மொபைல்கள், பவர்ஃபுல் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். நோக்கியா ஆஷா-303 மொபைல் கியூவர்டி கீப்பேட் வசதியை கொண்டது. இதே ஆஷா-300 மொபைல் சாதாரண நியூமரிக் கீப்பேட் வசதியை கொண்டது.

கேமரா வசதியில் ஆஷா-300 மொபைல், ஆஷா-303 மொபைலைவிடவும் சிறப்பானதாக இருக்கிறது. 5 மெகா பிக்ஸல் கேமரா இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 2592 X 1944 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை பெறுவது மிகவும் எளிதான காரியமாகிறது.

ஆஷா-303 மொபைலில் 3.2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இந்த இரண்டு மொபைல்களிலுமே விஜிஏ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஃப்ரேம்கள் மட்டும் வித்தியாசப்படுகிறது. ஆஷா-300 மொபைல் ஒரு நொடிக்கு 30 ஃபிரேம்களையும், ஆஷா-303 மொபைல் நொடிக்கு 15 ஃபிரேம்களிலும் வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதியை கொடுக்கின்றது.

ஆஷா-300 மொபைலில் உள்ள ஸ்டான்டர்டு லித்தியம் 1110 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக இயங்க துணை புரிகிறது. ஆஷா-303 மொபைலில் 1,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. நோக்கியா ஆஷா-300 மொபைல் ரூ.5,000 விலை கொண்டதாக இருக்கும். நோக்கியா ஆஷா-303 மொபைல் ரூ.8,000 ஒட்டிய விலையில் கிடைக்கும். ஆஷா-300, ஆஷா-303 மொபைல்கள், தொழில் நுட்பத்திலும், மற்றும் விலையிலும் வாடிக்கையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X