ஆஷா குடும்பத்தில் மேலும் 2 புதிய மொபைல்களைக் களமிறக்கும் நோக்கியா

Posted By: Karthikeyan
ஆஷா குடும்பத்தில் மேலும் 2 புதிய மொபைல்களைக் களமிறக்கும் நோக்கியா

கடந்த செப்டம்பர் மாதம் ஆஷா 308 மற்றும் ஆஷா 309 ஆகிய போன்களை நோக்கியா களமிறக்கியது. தற்போது ஆஷா குடும்பத்தில் இரண்டு புதிய போன்களை நோக்கியா களமிறக்கி இருக்கிறது. இந்த போன்களுக்கு ஆஷா 205 மற்றும் ஆஷா 206 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளன.

இந்த இரண்டு போன்களுமே ரூ.3,500 அளவில் விற்கப்பட இருக்கின்றன. இதன் மூலம் நோக்கியா சாதாரண மக்களைக் குறிவைத்து இந்த போன்களைக் களமிறக்குகிறது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

ஆஷா 205 மற்றும் 206 ஆகிய இரண்டு போன்களும் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. ஆனால் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

இந்த இரண்டு போன்களும் ஏறக்குறைய சம அளவிலான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. இரண்டுக்கும் இடைய சிறிய அளவில் மட்டுமே வேறுபாடுகள் உள்ளன.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot