வடிவமைப்பில் அசத்தும் நோக்கியா ஆஷா-201!

By Super
|

வடிவமைப்பில் அசத்தும் நோக்கியா ஆஷா-201!
பல வெற்றி வாகைகளை சூடி பயணித்து கொண்டிருக்கிறது ஆஷா சிரீஸ் மொபைல்கள். ஆஷா-201 மொபைலிலும் பல அரிய வசதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் டியூவல் பேண்டு வசதிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தகவல்களானாலும், புகைப்படமானாலும் தெளிவாக காட்ட இதில் 2.4 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெற முடியும். இந்த திரை டிஎப்டி தொழில் நுட்ப

வசதியினையும் வழங்கும். சூம் வசதி கொண்ட 2.0 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா 1600 X 1200 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்ப வசதியின் மூலம் பிரவுசிங் வசதியினை எளிதாக பெற்று பயனடையலாம். இதன் பேட்டரியும் மிக உயர்ந்த தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்யும் வகையில் தான் இருக்கும். ஆஷா-201 மொபைலில் 1,320 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 420 நிமிடம் டாக் டைம் மற்றும் 888 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும். நோக்கியா ஆஷா-201 மொபைலை ரூ.4,150 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X