வாடிக்கையாளர்களைக் கவர வருகிறது புதிய நோக்கியா ஏஸ் ஸ்மார்ட்போன்

Posted By: Staff

வாடிக்கையாளர்களைக் கவர வருகிறது புதிய நோக்கியா ஏஸ் ஸ்மார்ட்போன்
ஏஸ் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை நோக்கியாவும், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் இந்த போன் அடுத்த ஆண்டு மார்க்கெட்டிற்கு வர உள்ளது.

இதில், அதநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த போனை களமிறக்க இரண்டு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

நோக்கியா ஏஸ் விண்டோஸ் மொபைல் 4.3 இஞ்ச் ப்ளாக் அமோல்டு தொடுதிரை வசதி கொண்டுள்ளது. இதில் 8 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கார்ல் செய்ஸ் லென்ஸ் மற்றும் ஆட்டோ ஃபோக்கஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதில் 1.4 ஜிஎச்இசட் சிபியு பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

4ஜி காம்ப்பேட்டிபிலிட்டி வசதியும் இதில் உள்ளது. இது எச்எஸ்பிஏ மூலம் செயல்படுகிறது. ஏடி மற்றும் டி நெட்வொர்க் வசதியும் இதில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த மொபைல் அனைவராலும் அதிகம் விரும்பப்படுகின்ற விண்டோஸ் புதிய மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இத்தகைய அற்புதமான வசதிகள் கொண்ட நோக்கியா ஏஸ் ஸ்மார்ட்போனின் விலை குறிந்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot