4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 835 உடன் பெஞ்ச்மார்க் தளத்தில் நோக்கியா 9.!

நோக்கியா 9 ஒரு செயல்திறன் மிக்க கருவியாய் வெளிவரும் என்பதில் சந்தேகமேயில்லை மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பெஞ்ச்மார்க் பட்டியல் அதை மேலும் உறுதி செய்கிறது.

|

நோக்கியா 3, நோக்கியா 5, மற்றும் நோக்கியா 6 ஆகிய ஆண்ட்ராய்டு கருவிகளை அறிவித்த பிறகு,எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து அதன் உயர் இறுதி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று நோக்கியா 9 கருவி சார்ந்த லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

நாம் கடந்த காலத்தில் கேட்டதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நோக்கியா 9 ஒரு செயல்திறன் மிக்க கருவியாய் வெளிவரும் என்பதில் சந்தேகமேயில்லை மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பெஞ்ச்மார்க் பட்டியல் அதை மேலும் உறுதி செய்கிறது.

4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 835 உடன் பெஞ்ச்மார்க் தளத்தில் நோக்கியா 9.!

எதிர்வரும் நோக்கியா 9 கருவி சார்ந்த குறிப்புகள் அன்டுடு (AnTuTu) பென்ஞ்மார்கில் காணப்படுகின்றன. வெளியான தகவலின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் அட்ரீனோ 540 ஜிபியூ உடன் இணைந்து க்யூஎச்டி (1440x2560 பிக்ஸல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மாடல் டிஏ-1004 என்ற பெயரின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் சான்றிதழ் தளத்தில் பட்டியலிடபட்டுள்ளது. இயக்கருவி சார்ந்து இதுவரை நாம் பெற்ற விவரக்குறிப்புக இந்த லீக்ஸ் தகவலுடன் பொருத்தமாக இருக்கும் அதே நேரத்தில் இந்த வார தொடக்கத்தில் வெளியான ஒரு கீக் பேஞ்ச் பட்டியல் நோக்கியா 9 ஒரு 8ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறுகிறது. இருப்பினும் இது நிச்சயமற்ற தன்மை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் நிறுவனம் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேம் மாறுபாடுகளில் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய லீக்ஸ் தகவலில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமிராக்களைக் கொண்டிருக்கும் என்று கூறுகிரியாது. இது பெரும்பாலும் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் குறிக்கிறது. இதுபற்றி எந்த கடந்த கால லீக்ஸ் தகவலும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது ஒரு 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டு வெளியாகும் வாய்ப்பு அதிகம்.

மேலும் முன்பு வெளியான தகவலின்கீழ், இக்கருவி க்யூஎச்டி டிஸ்ப்ளேவை அடிப்படையாகக் கொண்ட 5.3 அங்குல திரை கொண்டிருக்கலாம். மேலும் நோக்கியா 9 சாதனமானது 64ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு மற்றும் பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவு ஆகியவைகளையும் கொண்டிருக்கலாம். மேலும், நோக்கியா 9 கைரேகை ஸ்கேனர்தனை முன்பக்கம் அதாவது ஹோம் பொத்தானுடன் உட்பொதிக்கப்பட்டு வரலாம் என்று கூறப்படுவதால் இக்கருவி பெஸல்-லெஸ் முதன்மை சாதனமாக வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 9 With Snapdragon 835, 4GB of RAM Spotted on AnTuTu Benchmark Site. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X