5 கேமராவுடன் அசத்த வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்.!
5 கேமரா சென்சார் உடன் உலகில் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது நோக்கியா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிக்கின்றது. மேலும் இதுகுறித்து டுவிட்டரிலும்
5 கேமரா சென்சார் உடன் உலகில் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கின்றது நோக்கியா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிக்கின்றது.

மேலும் இதுகுறித்து டுவிட்டரிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் பல்வேறு வசதிகளும் இருக்கின்றது. இதனால் செல்போன் நிறுவனங்களிடையே கடும் போட்டியும் ஏற்படலாம்.

நோக்கியா 9:
நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் முன்புற வடிவமைப்பு தெளிவாக தெரியும்படி புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. இந்த புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்த நோக்கியா 9 கான்செப்ட் புகைப்படங்களை போன்றே காட்சியளிக்கின்றது.

நோக்கிய 9 வெளியீடு :
ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் நோக்கியா 9 வெளியீடு சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழவின் போது, நடைபெறலாம் என தெரிகின்றது.

5 கேமரா லென்ஸ்:
இதுவரை இணையத்தில் வெளியான தகவல்களின்படி நோக்கியா 9 ஸ்மார்ட்போன் விவரங்களின் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து மேரா லென்ஸ், செய்ஸ் பிராண்டிங், எல்இடி பிளாஷ், பிராக்சிமிட்டி, லேசர் ஆட்டோ போகஸ் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுகிறது.
கொரில்லா கிளாஸ்:
இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படும் என கூறப்படுகின்றது. கூடுலாக ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:
இத்துடன் 6.0 ஆன்ச் டிஸ்பிளே, அதிகபட்சம் 4150 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

845 ஸ்னாப்டிராகன்:
மேலும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், சமீபத்திய ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.


Click it and Unblock the Notifications