Subscribe to Gizbot

தயாராகிவிட்ட நோக்கியா 9: எப்போது அறிமுகம்.? என்னென்ன அம்சங்கள்.?

Written By:

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2018 நிகழ்வு இன்னும் நெருக்கமாகி கொண்டே வரும் நிலைப்பாட்டில், பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் முன்னோடி சாதனங்களை களமிறக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிறுவனங்களில் - நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள - எச்எம்டி க்ளோபலும் ஒன்றாகும்.

தயாராகிவிட்ட நோக்கியா 9: எப்போது அறிமுகம்.? என்னென்ன அம்சங்கள்.?

கடந்த ஆண்டு தொடங்கி, நோக்கியா பிராண்ட்டின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வரும் எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, தனது எம்டபுள்யூசி 2018 நிகழ்வு சார்ந்த அழைப்பிதழில் வருகிற பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி அன்று, அதன் புத்தம் புதிய கருவியை அறிமுகம் செய்யவுள்ளதென்பதை ஏற்கனவே வெளிப்படுத்திவிட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அமேசான் தளத்தில்

அமேசான் தளத்தில்

அதென்ன ஸ்மார்ட்போன் என்பது தான் இப்போது எழும் ஒரே கேள்வி.? - சமீபத்திய லீக்ஸ் தகவலொன்று அது நோக்கியா 9 ஆக இருக்கலாம் என்கிறது. வரவிருக்கும் நோக்கியா 9 பற்றிய ஏற்கனவே பல லீக்ஸ் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் தோன்றியிருந்தாலும் கூட, அமேசான் தளத்தில் வெளியாகியுள்ள நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் ப்ரொடெக்டிவ் கேஸ்கள் (protective cases) ஆனது கூறப்படும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை உறுதிசெய்கின்றன.

பட்டியலிடப்பட்டுள்ள கேஸ்கள்

பட்டியலிடப்பட்டுள்ள கேஸ்கள்

அதுமட்டுமின்றி வெளியான கேஸ்கள் நிறுவனத்தின் முதன்மை சாதனத்தின் அறிமுகத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ள கேஸ்கள் ஆனது பிரபல கேஸ் தயாரிப்பாளரான ஹூயாலாப்ரோ அண்ட் டெர்ரப்பின் (HualaBro & Terrapin) மூலம் தயாரிக்கபட்டுள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)
வடிவமைப்பு மற்றும் இரட்டை கேமரா அமைப்பு

வடிவமைப்பு மற்றும் இரட்டை கேமரா அமைப்பு

வெளியாகியுள்ள பெரும்பாலான கேஸ்கள், நோக்கியா 9-ன் முன் மற்றும் பின்புறத்தில் பெரிய அளவிலான வடிவமைப்பு கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன. உடன் ஸ்மார்ட்போனின் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் இரட்டை கேமரா அமைப்பு ஆகிய பிராதன அம்சங்களையும் உறுதிப்படுத்துகிறது.

பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர்

வெளியான புகைப்படத்தின்படி, நோக்கியா 9-ன் இரட்டை கேமரா சென்சர்கள் ஆனது செங்குத்து அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் எல்இடி பிளாஷ் ஆனது கேமரா தொகுதிக்கு வலது பக்கத்தில் பொதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேமரா அமைப்பின் கீழ் பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஒன்றும் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 845.?

ஸ்னாப்டிராகன் 845.?

க்வால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் மூலம் இயக்கப்படும் இரண்டாம் தலைமை கருவியாக நோக்கியா 9 இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்டை கொண்டு தான் நோக்கியா 9 வெளியாகுமென எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது பெரும் அடியாகும்.

16: 9 விகிதம்

16: 9 விகிதம்

இதுவரை வெளியான பல பென்ஞ்மார்க் பட்டியலின்படின் நோக்கியா 9 ஆனது அதன் சிப்செட் உடனான 6 ஜிபி ரேம் கொண்டு இணைந்திருப்பதாக தெரிய வருகிறது. இது தவிர, முன்னர் வெளியான எப்சிசி பட்டியலின்படி நோக்கியா 9 ஆனது 18: 9 என்கிற திரைவிகிதத்திற்கு பதிலாக ஒரு வழக்கமான 16: 9 விகிதம் கொண்டிருக்கும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு ஓரியோ

இருப்பினும் கூட கூறப்படும் நோக்கியா 9 ஆனது 2560 x 1440 அளவிலான பிக்சல்கள் கொண்ட உயர்-தீர்மானம் 2கே டிஸ்ப்ளேவை பயன்படுத்தவும் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கவும் அதிக வாய்ப்புள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பற்றிய மேலும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Nokia 9 With Dual Rear Cameras Leaked. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot