நோக்கியா 9 : 4ஜிபி இல்லையாம், 8ஜிபி ரேம் கொண்டிருக்குமாம்.!

|

நோக்கியாவின் வரவிருக்கும் முக்கியமான ஆண்ட்ராய்டு கருவிகளில் ஒன்றான நோக்கியா 9 பற்றி சமீபத்தில் நிறைய கசிவுகள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் சமீபத்தில் வெளியான கீக்பென்ஞ்ச் பட்டியலில் சிக்கிய நோக்கியா 9 கருவியில் 4ஜிபி ரேம் இடம்பெறும் என்ற தகவல் வெளியானது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பென்ஞ்ச்மார்க் தவகவளின் கீழ் நோக்கியா 9 சார்ந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

நோக்கியா 9 : 4ஜிபி இல்லையாம், 8ஜிபி ரேம் கொண்டிருக்குமாம்.!

வெளியாகியுள்ள புதிய தகவலின்கீழ் இக்கருவி 8ஜிபி ரேம் கொண்டு வரும் என்று அறியப்படுகிறது. இது நிறுவனத்தின் மிகவும் எதிர்பாராத ஒரு நடவடிக்கையாகும். இந்த முடிவு உண்மையாக இருப்பின் நோக்கியா 9 மாறுபட்ட மாறுபாடுகளில் வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

மறுபக்கம் வெளியான தகவல் இக்கருவியை அன்நோன் ஹார்ட் என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு கவனிக்க வேண்டும். 1.90ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஒரு ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படும் என்றும் வெளியான தகவல் காட்டுகிறது. நோக்கியா 9 கருவியில் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்றும் தெரிகிறது.

எவ்வாறாயினும், நோக்கியா 9 பற்றிய அதிகாரப்பூர்வமாக அதகவல்கள் வெளியாகும்வரை இதுபோன்ற லீக்ஸ் தகவல்களில் இருந்து சிறிய பகுதிகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
A new benchmark result has surfaced and it reveals some interesting thing about the smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X