டூயல் கேம்; கர்வுடு டிஸ்பிளே என மெர்சலான கெட்-அப்பில் நோக்கியா 9.!

Written By:

நோக்கியா பிராண்ட் கருவிகளை உற்பத்தி செய்யும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம், ஏற்கனவே நோக்கியா ஸ்மார்ட்போன்கலின் புகழை மீண்டும் நிலைநாட்டிவிட்ட இந்த தருணத்தில் போட்டியாளர்களை கவனிக்கும் நோக்கத்தின் கீழ் - ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த - பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதை நம் அறிவோம்.

ஆம், நீங்கள் நினைத்தது சரிதான் - நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பற்றிய சமீபத்திய லீக்ஸ் நமக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அதே சமயம் ஒரு குறையும் கொண்டுள்ளது. வெளியான அம்சங்கள் என்னென்ன மற்றும் கூறப்படும் குறை என்ன என்பதை விரிவாக காண்போம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா 9

நோக்கியா 9

கிளாசிக் கருவியான நோக்கியா 3310 திரும்பி வந்துவிட்டது; உடன் ஆரம்பகட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களான நோக்கியா 3, 5, 6 மற்றும் 8 ஆகியவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது, அடுத்தது மிக விரைவில் நோக்கியா 9 தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கான்செப்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

உலோக யூனிபாடி கர்வுடு டிஸ்பிளே

உலோக யூனிபாடி கர்வுடு டிஸ்பிளே

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் அதே நேரத்தில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறவில்லை. ஒரு உலோக யூனிபாடி கர்வுடு டிஸ்பிளே கொண்டிருந்தாலும் கூட வழக்கமான அளவை விட சற்று பெரிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது

ஒப்பீட்டளவில் மெல்லியதாக

ஒப்பீட்டளவில் மெல்லியதாக

அதாவது கேலக்ஸி எஸ்7 எட்ஜ் வளைவு முனைகளைப்போலவே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேல் மற்றும் கீழ் பெஸல்கள் கூட ஒப்பீட்டளவில் மெல்லியதாக உள்ளன.

யூஎஸ்பி டைப்-சி போர்ட்

யூஎஸ்பி டைப்-சி போர்ட்

முன்பக்க கேமராவின் அருகில் ஒரு பேச்சாளர் கிரில் /இயர்பீஸ் உள்ளது மற்றும் முகப்பு பொத்தானைக் கொண்டிருக்கவில்லை. கீழே உள்ள பேனலில், ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஒரு ஆன்டெனா ம்யூசிக்பேண்ட் மற்றும் ஸ்பீக்கர்கள் காணப்படுகிறது.

பவர் பொத்தானை மற்றும் வால்யூம் கட்டுப்பாடு

பவர் பொத்தானை மற்றும் வால்யூம் கட்டுப்பாடு

சாதனத்தின் சிம் ஸ்லாட் இடது பக்கத்தில் அமைந்திருக்கும் போது, ​பவர் பொத்தானை மற்றும் வால்யூம் கட்டுப்பாடு பொத்தான்கள் வலது புறத்தில் அமர்ந்துள்ளன. இருபுறமும் ஆன்டெனா கோடுகள் உள்ளன.

நோக்கியா பிராண்டிங் லோகோ

நோக்கியா பிராண்டிங் லோகோ

பின்புற இரட்டை கேமரா அமைப்பு செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது உடன் கைரேகை சென்சார் ஒன்றும் இரட்டை கேமரா அமைப்புக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது அதன் கீழே நோக்கியா பிராண்டிங் லோகோ இடம்பெறுகிறது.

பிரீமியம் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறது

பிரீமியம் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறது

மேலும் இந்த கான்செப்ட், நோக்கியா 9 ஸ்மார்ட்போனை ஒரு பிரீமியம் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறது. இது நோக்கியா 8 ஸ்மார்ட்போன் பெட்ரா அதே வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அடுத்த ஆண்டு தொடங்கப்படலாம்.

6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம்

6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம்

நோக்கியா 9 ஆனது 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி உள் சேமிப்பு ஆகிய சேமிப்பு அம்சங்களை கொண்டுவரலாமென நோக்கியா எதிர்பார்க்கிறது. மேலும் நோக்கியா 9 தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி 68 மதிப்பீட்டையும் பெற அதிக வாய்ப்புள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Nokia 9 video shows dual cameras, curved display, no headphone jack. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot