மூன்று ரியர் கேமரா; 21எம்பி செல்பீ; 8ஜிபி ரேம்: மிரட்டும் நோக்கியா 9.!

இது 30 நிமிடங்களில் 60 சதவிகிதம் வரை செய்ய உதவும் பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

|

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் நோக்கியா 9-ன் 'டேட்டா ஷீட்' வெளியாகியுள்ளது. அதாவது வரவிருக்கும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ள அம்சங்கள் என்னென்ன என்பது பற்றிய விவரங்கள் "கச்சிதமாக" வெளியாகியுள்ளது.

ஒரு நீண்டகால எதிர்பார்ப்பிற்கு மற்றும் காத்திருப்பிற்கு பின்னர் - எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் வழியாக - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தயாரித்து, அறிமுகம் செய்யும் பணிகளை நோக்கியா மேற்கொண்டது. முதலில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்திய நோக்கியா, தனக்கு கிடைத்த வரவேற்பை அறிந்த பின்னர் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வெளியிடத் தொடங்கியது.

வெளியாகியுள்ள டேட்டா ஷீட்டின்படி.!

வெளியாகியுள்ள டேட்டா ஷீட்டின்படி.!

அந்த வரிசையில் - நோக்கியா 8 மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போனை தொடர்ந்து - நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. வெளியாகியுள்ள டேட்டா ஷீட்டின்படி நோக்கியா 9 ஆனது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 அல்லது அண்மையில் வெளியான ஆப்பிள் ஐபோன் மாடல்களின் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை எடுத்து கொள்ளுமென தோன்றுகிறது.

கொரில்லா கிளாஸ் 5.!

கொரில்லா கிளாஸ் 5.!

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பார்சிலோனாவில் நிகழ்ந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 9-ன் பெரும்பாலான அம்சங்கள் இப்போது தான் வெளியாகியுள்ளது. வெளியான டேட்டா ஷீட்டில், சில பிரம்மாண்டமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது நோக்கியா 9-ல் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி ரேம், கொரில்லா கிளாஸ் 5, ஒரு மூன்று கேமரா அமைப்பு, ஒரு கிளாஸ் கைரேகை ரீடர், பின்பக்க பேனலில் ஒரு 18-காரட் கோல்ட் பினிஷ் மற்றும் ஐபி68 மதிப்பீடு ஆகியவைகளை கொண்டுள்ளது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி.!

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி.!

தவிர டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, 18: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட 6.01 இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளே, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி உடன் இணைந்த 8 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

மூன்று கேமரா.!

மூன்று கேமரா.!

நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் கேமரா திகழ்கிறது. இந்த ஸ்மார்ட்போன், கார்ல் செய்ஸ் ஆப்டிக்ஸ், 4எக்ஸ் ஆப்டிகல் ஜூம், ஸெனான் மற்றும் எல்இடி பிளாஷ் ஆகியவைகளை கொண்ட ஒரு 41 மெகாபிக்சல், 20 மெகாபிக்சல் மற்றும் 9.7 மெகாபிக்சல் என்கிற மூன்று கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த பின்புற கேமரா அமைப்பும்.!

ஒட்டுமொத்த பின்புற கேமரா அமைப்பும்.!

இதன் 41எம்பி கேமராவானது, 1.4-மைக்ரான் பிக்சல்கள், ஓஐஎஸ், ஒரு பரந்த கோண லென்ஸ் மற்றும் எப் / 1.5 மற்றும் எப் / 2.4 என்கிற வேரியபிள் அப்பெர்ஷர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டாவது கேமராவான 20-மெகாபிக்சல், ஒரு டெலிபோட்டி லென்ஸ் ஆகும், இது ஓஐஎஸ், 1 மைக்ரான் பிக்சல்கள் மற்றும் ஒரு எப் / 2.4 அப்பெர்ஷர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கேமராவான, 9.7 மெகாபிக்சல் சென்சார் ஆனது மோனோக்ரோம் கேமராவாகும். இந்த ஒட்டுமொத்த பின்புற கேமரா அமைப்பும் ஒரு 18-காரட் கோல்ட் ட்ரிம் உடன் இணைந்துள்ளது.

21 மெகாபிக்சல்.!

21 மெகாபிக்சல்.!

முன்பக்கத்தை பொறுத்தவரை நோக்கியா 9 ஆனது, 1.4-மைக்ரான் பிக்சல்கள், ஒரு எப் / 1.8 அப்பெர்ஷர் மற்றும் கார்ல் செய்ஸ் அப்படிக்ஸ் ஆகியவைகளை கொண்ட ஒரு 21 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்குமென பட்டியலிடப்பட்டுள்ளது. ப்ரோ கேமரா பயன்முறையை தவிர்த்து, நோக்கியா 9 ஆனது நிறுவனத்தின் பொத்தீ அம்சத்தையும் கொண்டிருக்கும்.

வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு.?

வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு.?

ஒரு 3900எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் நோக்கியா 9 ஆனது, ஒரு முழுமையான சார்ஜின்கீழ், 24 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 565 மணி நேர காத்திருப்பு நேரம் ஆகியவற்றை வழங்கும். மேலும் இது 30 நிமிடங்களில் 60 சதவிகிதம் வரை செய்ய உதவும் பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 9 ஆனது வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

இணைப்பு ஆதரவுகள் மற்றும் இதர அம்சங்கள :

இணைப்பு ஆதரவுகள் மற்றும் இதர அம்சங்கள :

- ப்ளூடூத் 5.0
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- க்ளோனாஸ்
- யூஎஸ்பி டைப்-சி
- என்எஃப்சி
- வைஃபை
- 256ஜிபி அளவிலான இன்டர்னெல் மெமரி
- ஒரு கிளாஸ் பிங்கர் பிரிண்ட் ரீடர்

Best Mobiles in India

English summary
Nokia 9 Specifications Leak, Show a Triple Camera Setup With 41-Megapixel Sensor. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X