நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதள ஆதரவுடன் வெளிவந்தது. தற்சமயம் வெளிவந்த அறிவிப்பு என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

நோக்கியா 9 பியூர் வியூ

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440
பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 பிராசஸர் அமைப்பைக்  கொண்டுள்ளது

நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்இனி குழப்பம் வேண்டாம்? ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட் போன்கள்

செல்பீ கேமரா

12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்

3320எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 9 PureView receives Android 10 update : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X