இந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.!

|

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஐந்து கேமராக்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக
வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா: ஆஃப்லைன் தளத்தில் கிடைக்கும் நோக்கியா 9 பியூர் வியூ.!

தற்சமயம் இந்த நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் சில ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது, எனவே வாடிக்கையாளர்கள் எளிமையாக சென்று வாங்கலாம். மேலும் பிளிப்கார்ட் தளத்திலும் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே:

நோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே:

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண்.! சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண்.! சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா:

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா:

12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்!அட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்!

நோக்கியா 9 பியூர் வியூ மெமரி:

நோக்கியா 9 பியூர் வியூ மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

பேட்டரி - விலை:

பேட்டரி - விலை:

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990-ஆக உள்ளது, குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகையுடன் இந்த மாடல் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 9 PureView now available via offline stores in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X