ஐந்து கேமராக்கள் கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.49,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.47,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் குறைக்கப்பட்ட விலையில் அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது, இந்த விலைகுறைப்பு அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனையாளர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த சாதனம் ஐந்து கேமராக்கள் கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

நோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே:
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது

ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் :
நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா:
12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 9 பியூர் வியூ மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நோக்கியா 9 பியூர் வியூ பேட்டரி
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications