இந்தியர்களுக்கு மட்டும் குறைவான விலையில் - நோக்கியா 9, என்னென்ன அம்சங்கள்.?

|

எந்தவிதனான 'ரிஸ்க்'கும் எடுக்காமல் நடுநிலையான அம்சங்களுடன், மிகவும் புத்திசாலித்தனமாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி விட்டுள்ள நோக்கியா நிறுவனம், மெல்ல மெல்ல மேலோங்கி இந்திய மொபைல் சந்தையை மீண்டும் ஆளப்போகிறது என்பதற்கு சமீபத்தில் வெளியான அதன் ஆண்ட் ராய்டு ஸ்மார்ட்போன்களே சாட்சி.!

இந்நிலைப்பாட்டில், நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் ஒன்றையும் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், நீங்கள் நினைப்பது சரியாயின் - நோக்கியா 9 விரைவில் அறிமுகமாகலாம்.!

ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ ஆப்பரேட்டிங் சிஸ்டம்

ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ ஆப்பரேட்டிங் சிஸ்டம்

உலகம் முழுவதும் கிடைத்த உற்சாகமான வரவேற்ப்பின் காரணமாக நோக்கியா நிறுவனம் அதன் ஹை-எண்ட் கருவியை மிகுந்த நம்பிக்கையுடன், அட்டகாசமான அம்சங்களுடன் வெளியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். முக்கியமாக ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வெளிவரும் என்கிறது சமீபத்திய ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் தரப்படுத்தல் இணைய தள அறிக்கை.

பளபளப்பான நீல வண்ணத்தில் தோற்றம்

பளபளப்பான நீல வண்ணத்தில் தோற்றம்

முன்னர் வெளியான தகவலில் நோக்கியா 9 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டு வெளியாகுமென கூறப்பட்ட நிலையில் சமீபத்திய ​நோக்கியா 9 லீக்ஸ் புகைப்படம் ஒன்று அதன் பளபளப்பான நீல வண்ணத்தில் தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

எட்ஜ்-டூ-எட்ஜ் 3டி கிளாஸ் டிஸ்பிளே

எட்ஜ்-டூ-எட்ஜ் 3டி கிளாஸ் டிஸ்பிளே

வெளியான புகைப்படத்தின் வழியாக சாதனத்தின் முன் மற்றும் பின்புற வடிவமைப்புகளை காண முடிகிறது. அதன்படி நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் மெல்லிய பெஸல்கள் மற்றும் எட்ஜ்-டூ-எட்ஜ் 3டி கிளாஸ் டிஸ்பிளே கொண்ட ஒரு தலைமை ஸ்மார்ட்போனாக காட்சியளிக்கிறது.

இரண்டு மாறுபாடு

இரண்டு மாறுபாடு

கார்ல் ஜெயஸ் பிராண்டிங் உடனான இரட்டை பின்புற கேமராக்கள், நோக்கியா 9 கருவியிலும் மீண்டும் செங்குத்தாக அமைக்கப்பட்டிருப்பதையும் மற்றும் கேமராவிற்கு கீழே கைரேகை சென்சார் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. வரும் நாட்களில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் நோக்கியா 9 ஆனது ஒரு தலைமை ஸ்மார்ட்போனாக, உயர் இறுதியில் அம்சங்களுடன் வெளியாகும் என்பது மட்டுமின்றி இரண்டு மாறுபாடுகளாய் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரூ.44,999/- என்ற புள்ளி

ரூ.44,999/- என்ற புள்ளி

நோக்கியா 9-ன் இந்திய விலைநிர்ணயத்தை பொறுத்தமட்டில், ரூ.44,999/- என்ற புள்ளியை எட்டலாமே எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் 749 யூரோவிற்கும் மற்றும் அமெரிக்க சந்தையில் 699 டாலருக்கும், அதாவது இந்திய சந்தை விலையுடன் ஒப்பிடும்போது பிற சந்தைகளில் அதிக விலைக்கு விற்க்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

5.5 அங்குல க்யூஎச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே

5.5 அங்குல க்யூஎச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே

அம்சங்களை பொருத்தமட்டில், நோக்கியா 9 ஆனது ஓஸோ ஆடியோ மேம்பாடு பெறும் முதல் நோக்கியா சாதனமாக திகழும். மேலும் இக்கருவியில் 5.5 அங்குல க்யூஎச்டி ஓஎல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும்.

3800எம்ஏஎச் பேட்டரி

3800எம்ஏஎச் பேட்டரி

ஸ்னாப்டிராகன் 835, அட்ரெனோ 540 ஜிபியூ உடன் இணைந்த 6ஜிபி / 8ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படலாம். உள்சேமிப்பை பொறுத்தமட்டில் 128ஜிபி இடம்பெறலாம் மற்றும் க்வால்காம் பாஸ்ட்-சார்ஜ் 4 ஆதரவுடனான ஒரு 3800எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம்.

12 மெகாபிக்சல் இரட்டை கார்ல்- செயிஸ் பின்புற கேமரா

12 மெகாபிக்சல் இரட்டை கார்ல்- செயிஸ் பின்புற கேமரா

கேமராத்துறையில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு 12 மெகாபிக்சல் இரட்டை கார்ல்- செயிஸ் பின்புற கேமரா மற்றும் ஒரு 12 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டிருக்கலாம். மேலும், நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எதிர்நோக்கபப்டும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழும் இடம்பெறலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 9 Polished Blue colour sketched image leaked. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X