அதிரடி அணிவகுப்பு : நோக்கியா 9, 8 கருவிகளின் மிரட்டும் அம்சங்கள்.!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 3310 (2017) கருவியானது கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோக்கியா பிராண்டின் சில உயர் இறுதியில் வன்பொருள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் தற்செயலாக இணையத்தில் கசிந்துள்ளது.

வெளியாகியுள்ள ஒரு சிறிய டீஸர் ஸ்டைல் வீடியோவின் கீழ் நோக்கியா நிறுவனத்தின் பிளாக்ஷிப் கருவிகளான நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன்கள் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான அம்சங்கள் வெளியாகியுள்ளன.

டீஸர் வீடியோ

டீஸர் வீடியோ

வெளியாகியுள்ள சுவாரசியமான நோக்கியா கசிவில் இருந்து, வெளியாகியுள்ள இரண்டு அலகுகளில் ஒன்று டூயல் கேம் அம்சம் அதாவது இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பிரபல டிப்ஸ்டர் ஈவன் பிளாஸால் முதலில் காணப்பட்ட இந்த டீஸர் வீடியோ முன்னர் நோக்கியாவுடனும் இப்போது எச்எம்டி நிறுவனத்துடன் பணிபுரியும் ஒரு புகைப்படக்காரர் மூலம் வீடியோ பகிர்வு வலைத்தளமான விமியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5

நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5

நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆகிய கருவிகளையும் இந்த வீடியோவில் காணலாம்.மேலும் இது தொழில்ரீதியாக சூட் செய்யப்பட்ட வீடியோவாகவே தெரிகிறது. உடன் (குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில்) இடது பக்கத்தில் உள்ள இரண்டு தொலைபேசிகளும் இதுவரை நிறுவனத்தினால் அறிவிக்கப்படவில்லை.

நோக்கியா 6

நோக்கியா 6

இந்த வீடியோவில் இருந்து நோக்கியா 6 முற்றிலும் காணாமல் போயிருந்தாலும், இந்த கசிந்த வீடியோவில் இருந்து மிக வெளிப்படையான ஒரு அம்சமாக இடது பக்கத்தில் உள்ள ஸ்மார்ட்போனிற்கு பின்னால் ஒரு இரட்டை கேமரா அமைப்பு உள்ளதை காண முடிகிறது.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறுவது இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த வீடியோவில் உள்ள ஸ்மார்ட்போன் அம்சங்கள் உண்மையில் தொலைபேசியில் இடம்பெறவும் ஒரு வாய்ப்பு உள்ளது.

கார்ல் ஜீஸ் ஒளியியல்

கார்ல் ஜீஸ் ஒளியியல்

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது கார்ல் ஜீஸ் ஒளியியல் உடனான 22 மெகாபிக்சல் இரட்டை லென்ஸ் பின்புற கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டிருக்கும் என்று வெளியான தகவல் பரிந்துரைக்கிறது.

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்

கடந்த மாதம் வெளியான ஒரு அறிக்கையின்படி, நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் (அவுட்-இன்-பாக்ஸ்) கொண்டு இயங்கும் மற்றும் 5.5 அங்குல க்யூஎச்டி (1440x2560 பிக்ஸல்) ஓல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறியிருந்தது.

நோக்கியா 9

நோக்கியா 9

மேலும் அந்த தகவல் நோக்கியா 9 கருவியானது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி உடன் 6 ஜிபி ரேம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8

நோக்கியா 8

புகைப்படத்தில் இடமிருந்து இரண்டாவதாக உள்ள மற்றொரு ஸ்மார்ட்போன் ஆனது நோக்கியா 8 ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 5.7 அங்குல க்யூஎச்டி (1440x2560 பிக்சல்கள்) டிஸ்பிளே மற்றும் 24 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

நோக்கியா 7-ஐ விட

நோக்கியா 7-ஐ விட

பிரபல டிப்ஸ்டர் ஆன ஈவன் பிளாஸ், "இக்கருவிகள் நோக்கியா 7-ஐ விட ஆனது சிறிய அளவிலான அம்சங்கள் கொண்டிருக்கும்" என்று முன்பு கூறியிருந்தார் ஆனால் இவைகள் நோக்கியா 6 ஸ்மார்ட்போனை விட உயர் இறுதி மாடல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ அறிவிப்பு

உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்த வீடியோ உண்மையானதாக இருந்தாலும் கூட புதிய ஸ்மார்ட்போன்கள் தொடர்பாக எந்தவொரு உறுதிப்படுத்தல் வாய்ந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 9, Nokia 8 Flagship Android Phones Get Leaked on Video. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X