நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 (2018) வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
சந்தையில் மற்ற அண்ட்ராய்டு பிளாக்ஷிப் மாடல்களைப் போலவே, இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போனுக்கு ஐபி 68 சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
எச்எம்டி குளோபல் சமீபத்தில் நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் விற்க உரிமைகளை வைத்திருக்கும் ஒரு ஆண்டு நிறைவுற்றது, அதன்பின்
எச்எம்டி குளோபல் நிறுவனம் கூடிய விரைவில் நோக்கியா 9 மற்றும் புதிய நோக்கியா 8 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி இந்த அசத்தலான நோக்கியா 9 மற்றும் புதிய நோக்கியா 8 ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 835:
புதிய நோக்கியா 8 மற்றும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி வழங்கப்பட்டுள்ளது
எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

நோக்கியா 9:
நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் டூயல் எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,அதன்பின்பு நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 2கே ரெசெல்யூஷன் இடம்பெற்றுள்ளது, மேலும் புதிய நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் 18:9 திரை விகிதம் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.

6ஜிபி ரேம்:
இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் :
சந்தையில் மற்ற அண்ட்ராய்டு பிளாக்ஷிப் மாடல்களைப் போலவே, இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போனுக்கு ஐபி 68 சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா:
நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், 4கே வீடியோ ரெக்கார்டிங் திறன் கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் முன்பக்க
கேமரா கொண்டது. பின்புறத்தில், ஒரு எல்இடி பிளாஷ் கொண்ட இரண்டு 13 மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெறுமென கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன்

3000எம்ஏஎச்:
நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விலை:
நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.41.000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications