Home
Mobile

கருவிழி ஸ்கேனர் உடன் நோக்கியா 9, வேறென்ன "சூப்பர்" அம்சங்கள்.?!

பெரிய தம்பி ஆப்பிள் மற்றும் சின்ன தம்பி சாம்சங் கவனத்திற்கு.!

By Muthuraj

நேற்றுவரை ஆப்பிள் வாங்கலாமா.? இல்லை சாம்சங் வாங்கலாமா அல்லது சியோமி வாங்கிடலாமா.? என்று நம்முள் ஓடிய கேள்விகள் தலைகீழாய் மாறி நோக்கியா 6 வாங்கலாமா.?? நோக்கியா 5 வாங்கலாமா அல்லது பேசாமல் நோக்கியா 3310 வாங்கிடலாமா.?? என்று முழுக்க முழுக்க நோக்கியா கருவிகள் மீதான கவனத்தையே நாம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

அந்த அளவிற்கு நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் அசுரத்தனமான அம்சங்கள் கொண்டு உலக ஸ்மார்ட்போன் சந்தையில் தனது பழைய மொபைல் விளையாட்டை தொடங்கிய நோக்கியா நிறுவனம் பற்றிய செய்திதான் எங்கும் எப்போதும் பேசப்படுகிறது. நோக்கியா நிறுவனத்தின் 6, 5 மற்றும் 3 ஆகிய பட்ஜெட் கருவிகள் அறிமுகமாகிவிட்ட நிலையில், அதன் உலக மாறுபாட்டிற்காக நாம் காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பேசாமல் நோக்கியா 9 வாங்கிடலாம் போலயே என்று உங்களை ஆக்கிரமிக்கும் அளவிலான அசத்தல் அம்சங்களை கொண்டுள்ளது நோக்கியா 9 - இது யாருக்கு பீடியை கிளப்புகிறதோ இல்லையோ சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு தலையில் கல்லைத்தூக்கிப் போட்டது போல இருக்கும்.!

கருவிழிப் படலம் ஸ்கேனர்

கருவிழிப் படலம் ஸ்கேனர்

கூறப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் மிகவும் சிறப்பம்சமாக கருவி ஒரு கருவிழிப் படலம் ஸ்கேனர் (Iris) கொண்டிருக்கும் மற்றும் கார்ல் ஜேயிஸ் கேமராக்கள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா ஒஸ்ளோ ஆடியோ

நோக்கியா ஒஸ்ளோ ஆடியோ

உடன் நோக்கியா 9 கருவியானது ஒரு க்வாட்எச்டி ஓல்இடி டிஸ்ப்ளே கொண்டு வரும் என்று கூறும் அறிக்கையின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் தான் நோக்கியாவின் முதல் "நோக்கியா ஒஸ்ளோ (OZO) ஆடியோ" மேம்பாடுகள் கொண்டு வரும் கருவி என்றும் சுட்டிக்காட்டுகிறது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

விரிவாக ஒரு குவாட் எச்டி 5.5 அங்குல ஓல்இடி டிஸ்ப்ளே, ஸ்னாப்ட்ராகன் 835 செயலி, அட்ரெனோ 540 ஜிபியூ உடனானஒரு பாரிய 6ஜிபி ரேம் கொண்டு வெளியாகும் என்று அறியப்படுகிறது.

இரண்டு சேமிப்பு மாதிரி

இரண்டு சேமிப்பு மாதிரி

மேலும் க்விக்சார்ஜ் 4 ஆதரவுடனான ஒரு 3800எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டு 64ஜிபி மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு என்ற இரண்டு சேமிப்பு மாதிரிகளில் வெளியாகும் என்றும், பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1.2 கொண்டு இயங்கும் என்றும் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

22எம்பி

22எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் ஒளியியல் துறையை பொருத்தமட்டில்செல்பீக்களுக்கான ஒரு 12எம்பி முன்பக்க கேமரா மற்றும் ஜோடியாக ஒரு 22எம்பி இரட்டை லென்ஸ் கார்ல் ஜெய்ஸ் பின்புற கேமரா கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரல் அச்சு சென்சார்

விரல் அச்சு சென்சார்

கூடுதலாக, நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆண்டு சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியில் இடம்பெற்ற ஒரு விரல் அச்சு சென்சார், ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

660 சிப்செட்

660 சிப்செட்

இதுமட்டுமின்றி நோக்கியா 8 மற்றும் நோக்கியா 7 என்ற மேலும் இரண்டு உயர் இறுதி ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியான தகவலில் அவைகள் வரவிருக்கும் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலோக யூனிபாடி வடிவமைப்பு

உலோக யூனிபாடி வடிவமைப்பு

கூறப்படும் நோக்கியா 8 ஆனது ஒரு க்வாட்எச்டி டிஸ்ப்ளே இடம்பெறும், மறுபக்கம் நோக்கியா 7 ஆனது ஒரு எச்டி டிஸ்ப்ளே கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டும், பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும் என்றும எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனம் அடித்த ஈ அடிச்சான் காப்பி தான் - ஐபோன் 8.!?

Best Mobiles in India

English summary
Nokia 9 may come with Iris Scanner, Carl Zeiss camera and more. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X