5கேமரா, 8ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன்.!
இந்திய சந்தையில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும், அதற்கு தகுந்தபடி எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய சந்தையில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும், அதற்கு தகுந்தபடி எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால் இந்த மாதம் இறுதியில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது அந்நிறுவனம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 5கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, பின்பு சிறந்த மென்பொருள் மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 9:
நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பின்புறம் 5கேமராக்கள் மற்றம் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் வசதி உள்ளது. மேலும் டூயல் செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டிஸ்பிளே:
இக்கருவி 6.1-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 855:
நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

8ஜிபி ரேம்:
நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி/8ஜபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங்
முந்தைய கசிவுகள் மற்றும் வதந்திகளைப் பொறுத்தவரையில்,வரவிருக்கும் நோக்கியா 9 சாதனமானது வயர்லெஸ் சார்ஜிங், 4150எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications