2018 : ஸ்னாப்டிராகன் 835 செயலியுடன் அசத்தலான நோக்கியா 9 அறிமுகம் .!
நோக்கியா 9 பெரும்பாலும் 2.5டி வளைந்த காட்சி மற்றும் கொரில்லா கண்ணாடிடன் பாதுகாக்கப்படும் ஒரு 5.5 அங்குல க்யூஎச்டி காட்சி கொண்டு, ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு இயங்கலாம்.
எச்எம்டி குளோபல் நிறுவனம் பொறுத்தவரை கடந்த பிப்ரவரியில் எம்டபள்யுசி2017 ஷோவில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது, பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் அட்காசமான நோக்கியா 8 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல்
சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்க்கும் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 7 ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது நோக்கியா நிறுவனம். மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்கள்.

அடுத்த வருடம்
அடுத்த வருடம்துவகத்தில் இந்த நோக்கியா 9 மற்றும் நோக்கியா 7 ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல்
நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 9 :
ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்ட பல இடைப்பட்ட சாதனங்களுடன், நோக்கியா நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும்
நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்திற்கு கடும்போட்டியை விளைவிக்கும் எட்ஜ்-டூ-எட்ஜ் அம்சம் இடம்பெறுமென தகவல்கள்
வெளியாகியுள்ளது.

கசிவுகள்:
நோக்கியாவின் வரவிருக்கும் முக்கியமான ஆண்ட்ராய்டு கருவிகளில் ஒன்றான நோக்கியா 9 பற்றி சமீபத்தில் நிறைய கசிவுகள் மற்றும்
வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் சமீபத்தில் வெளியான கீக்பென்ஞ்ச் பட்டியலில் சிக்கிய நோக்கியா 9 கருவியில் 4ஜிபி ரேம் இடம்பெறும் என்ற தகவல் வெளியானது.

ஸ்னாப்டிராகன் 835 :
நோக்கியா 9 பெரும்பாலும் 2.5டி வளைந்த காட்சி மற்றும் கொரில்லா கண்ணாடிடன் பாதுகாக்கப்படும் ஒரு 5.5 அங்குல க்யூஎச்டி காட்சி கொண்டு, ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு இயங்கலாம். மேலும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் விரிவாக்கத்திற்கான மெமரி கார்டு
ஸ்லாட்டைக் கொண்டிருக்கலாம்.

கேமரா :
கேமரா அம்சத்தை பொருத்தமட்டில் இந்த நோக்கியா 9 ஒரு இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 2 × 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விலை நிர்ணயம் :
இந்த அறிவிக்கப்படாத சாதனத்தின் இந்த முதன்மை-நிலை குறிப்பீடுகளின் கீழ் இக்கருவியின் விலை அடைப்புக்குறி இதுவாக
இருக்கலாம் என்றும் கணிக்க முடிகிறது அப்படியாக இந்த நோக்கியா 9 சுமார் 700 டாலர்களுக்கும் மேலாக விலை நிர்ணயம் பெறலாம்
என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications