ரூ.34,990/-க்கு நோக்கியா 9-ஐ வாங்குவீர்களா.? முதலில் அம்சங்களை பாருங்கள்.!

சுவாரசியமாக மற்றும் எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் முனைப்பில், அழைப்பிதழில் எந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படவுள்ளது என்கிற பெயரோ அல்லது விவரமோ குறிப்பிடப்படவில்லை.

|

நோக்கியா 6 (2018) வெளியீட்டைத் தொடர்ந்து, நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது, பார்சிலோனாவில் நிகழும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்ச்சியில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியான ஜுஹோ சர்விகாஸ், நோக்கியா ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உறுதி செய்துள்ளார்.

ரூ.34990/-க்கு நோக்கியா 9-ஐ வாங்குவீர்களா? முதலில் அம்சங்களை பாருங்கள்

எம்டபுள்யூசி 2018 நிகழ்வில், எச்எம்டி நிறுவனம் சில அற்புதமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார். "எங்களின் மௌனத்திற்கு மன்னிக்கவும். #MWC2018-க்கு சூப்பர் பிஸியாக திட்டமிட்டுள்ளோம். அது அட்டகாசமாக இருக்குமென்பதை நம்புங்கள்" என்று சர்விகாஸ் நேற்று ட்வீட் செய்துள்ளார்.

பிப்ரவரி 25

பிப்ரவரி 25

அதனை தொடர்ந்து எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது அதன் எம்டபுள்யூசி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை அனுப்ப தொடங்கியுள்ளது. வருகிற பிப்ரவரி 25 அன்று பார்சிலோனாவின் மியூசியம் ஆஃப் கான் டெம்போரரிஆர்ட் அரங்கத்தில் இந்த வெளியீடு நடைபெறவுள்ளது.

பெயரோ அல்லது விவரமோ குறிப்பிடப்படவில்லை

பெயரோ அல்லது விவரமோ குறிப்பிடப்படவில்லை

சுவாரசியமாக மற்றும் எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் முனைப்பில், அழைப்பிதழில் எந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படவுள்ளது என்கிற பெயரோ அல்லது விவரமோ குறிப்பிடப்படவில்லை. என்றாலும் கூட நிறுவனத்தின் நோக்கியா 9 மற்றும் ஒரு புதிய பதிப்பான நோக்கியா 8 அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமென வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்ட்ரா மெல்லிய பெசல்

அல்ட்ரா மெல்லிய பெசல்

வெளியான அழைப்பிதழ் ஆனது வெறுமனே "எங்கள் கதையின் அடுத்த அத்தியாயத்தின் ஒரு நெருக்கமான மற்றும் பிரத்தியேக திறனாய்விற்காக நோக்கியா குடும்பத்தோடு இணையவும்" என்று கூறுகிறது. எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தமட்டில் நோக்கியா 9 ஆனது ஒரு அல்ட்ரா மெல்லிய பெசல் மற்றும் நவநாகரீக 18: 9 என்கிற விகிதத்திலான டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி

6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி

மேலும் இதன் திரை 2கே தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல டிஸ்பிளேவாக இருக்கும். இந்த சாதனம் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி உடனான 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கப்படும். கசிந்த குறிப்புகளின்படி, இக்கருவியில் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி-க்கு பதிலாக சமீபத்திய ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெறலாம்.

12எம்பி + 13எம்பி

12எம்பி + 13எம்பி

கேமராத்துறையை பொறுத்தமட்டில் நோக்கியா 9 ஆனது செய்ஸ் ஆப்டிக்ஸ் ஒளியியலுடன் கூடிய இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்குமென இதுவரை வெளியான வதந்திகள் தெரிவிக்கின்றன. அதாவது 12எம்பி + 13எம்பி என்கிற அளவிலான இமேஜ் சென்சார்களை பயன்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
2எக்ஸ் ஆப்டிகல் ஜூம்

2எக்ஸ் ஆப்டிகல் ஜூம்

இந்த ஆண்டு எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து நோக்கிய ஸ்மார்ட்போன்களிலுமே மேம்படுத்தப்பட்ட நோக்கியா கேமரா பயன்பாடு இடம்பெறும் என்பதும் அது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் பரந்த-கோண பயன்முறை போன்ற அம்சங்களை வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம்

பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம்

செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் (எப்சிசி சான்றிதழ் தள பட்டியலின்படி) ஒரு 5எம்பி சென்சார் கொண்டிருக்கலாம், உடன் ஒரு 3250எம்ஏஎச் திறன்கொண்ட பேட்டரி மூலம் பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவற்றுடன் சக்தியூட்டப்படலாம். நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயமானது ரூ.34,990/- ஆகும்.

இயக்க முறைமை

இயக்க முறைமை

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்க முறைமையின்கீழ் இயங்குமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அம்சங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை அறிந்துகொள்வதற்கு பிப்ரவரி 25-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் பல ஸ்மார்ட்போன் வெளியீடுகள் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Nokia 9 With Snapdragon 835 SoC Expected to Launch at the MWC 2018 as HMD Global Sends Out Media Invite. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X