உறுதி செய்யப்பட்டது: டூயல் செல்பீ கேம் உடன் ஜன.19 முதல் நோக்கியா 9.!

|

நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் அடுத்த என்ன ஸ்மார்ட்போனை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த தருணத்தில் நோக்கியா 9 தான் வெளியாகும் அதுவும் 2018 ஆம் ஆண்டின் பிளாக்ஷிப் கில்லர் கருவியாக களமிறங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்டது: டூயல் செல்பீ கேம் உடன் ஜன.19 முதல் நோக்கியா 9.!

சமீபத்தில் வெளியான எப்சிசி லீக்ஸ் தகவலில் சிக்கிய நோக்கியா 9 ஆனது ஒரே ஒரு 5எம்பி செல்பீ கேமராவை மட்டுமே கொண்டிருக்குமென்று வெளிப்படுத்தியது. அதுவொரு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள லீக்ஸ் நோக்கியா பிரியர்களை குஷியாக்கியுள்ளது.

சிகோனி சிகேஏசிஇ16 பிராண்டல்

சிகோனி சிகேஏசிஇ16 பிராண்டல்

முதலில் வெளியான லீக்ஸ் தகவலை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட விசாரணையில் நோக்கியா 9 ஆனது அதன் முன்பக்கத்தில் இரட்டை கேமரா அமைப்பை ஆதரிப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள எப்சிசி ஆவணத்தின் படி, நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு சிகோனி சிகேஏசிஇ16 பிராண்டல் (Chicony CKACE16 frontal module) தொகுதிகளை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

தவறான புகைப்படம்

தவறான புகைப்படம்

ஸ்மார்ட்போனின் உற்பத்தியாளர் வலைத்தளத்திலும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் அம்சங்கள் சார்ந்த விவரப்பட்டியலில் ஒற்றை செல்பீ கேமரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தவறான புகைப்படமே காரணம்.

1080பி வீடியோ பதிவு ஆதரவு

1080பி வீடியோ பதிவு ஆதரவு

கூறப்படும் சிகோனி சிகேஏசிஇ16 ஆனது, ஆட்டோஃபோகஸ் மற்றும் எப்/ 2.0 துளை கொண்ட 5எம்பி கேமராவாகும். இது 1080பி வீடியோ பதிவு ஆதரவு கொண்டுள்ளது. மற்றொரு கேமராவானது எப்/ 2.4 துளையுடனான 5எம்பி சென்சாராக உள்ளது. கேமரா அம்சங்களை தவிர்த்து வேறெந்தெ அம்சங்களையும் சமீபத்திய அறிக்கை பகிரவில்லை.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் பின்புற இரட்டை கேமரா அமைப்பை பொறுத்தமட்டில் (எப்சிசி பட்டியலின் படி) 12எம்பி + 13எம்பி சென்சார்கள் இடம்பெறும். மேலும் நோக்கியா 8 ஸ்மார்ட்போனை போலவே இதன் இரண்டாம்நிலை கேமராவது டெலிபோர்டு லென்ஸ் ஆக, அல்லது ஒரு மோனோக்ரோம் சென்சார் ஆக செயல்படலாம்.

அல்டரா ஸ்லிம் பெஸல்கள்

அல்டரா ஸ்லிம் பெஸல்கள்

இதற்கு முன்னர் வெளியான தகவலின்படி, நோக்கியா 9 ஆனது (கிட்டத்தட்ட முழுமையான) பெஸல்லெஸ் டிஸ்பிளேவை வெளிப்படுத்துகிறது. கருவியின் வலது மற்றும் இடது பக்கத்தில் அல்டரா ஸ்லிம் பெஸல்கள் இடம்பெறுள்ளது. நோக்கியா 9-ன் மேல் மற்றும் தாடை பகுதியில் தாட் பிட் அடர்த்தியான பெஸல்களை காணமுடிகிறது. முன்னதாக வெளியான கசிவுகள் இந்த சாதனம் 18: 9 என்கிற விகிதத்திலான திரை அளவை கொண்டிக்கும் என்கிறது.

மாதிரி எண்- டிஏ -1005 என்கிற பெயரின்கீழ்

மாதிரி எண்- டிஏ -1005 என்கிற பெயரின்கீழ்

எல்லாவற்றிக்கும் மேலாக இந்த ஸ்மார்ட்போன் அதன் முக்கிய குறிப்புகளை எப்சிசி தளத்தில் (FCC) வெளிப்படுத்தியது. அந்த பட்டியலின் படி, நோக்கியா 9 ஆனது மாதிரி எண்- டிஏ -1005 என்கிற பெயரின்கீழ் காணப்பட்டது. அதன் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.5 அங்குல (எல்ஜி நிறுவனம் மூலம்செ ய்யப்பட்ட) ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 18: 9 அளவிலான பேனல் கொண்டிருக்கும்.

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

இந்த சாதனம் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படும். வெளியான, எப்சிசி சான்றிதழ் ஆவணங்கள் பட்டியலில் ரேம் அளவு பற்றிய விவரங்கள் இல்லை. இருப்பினும் இக்கருவி 128ஜிபிவரையிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

3250எம்ஏஎச் பேட்டரி

3250எம்ஏஎச் பேட்டரி

ஆண்ட்ராய்டு ஓரியோவை கொண்டு இயங்கும் நோக்கியா 9 ஆனது 3250எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாம். வடிவமைப்பை பொறுத்தமட்டில், நோக்கியா 9 ஆனது நோக்கியா 8-ன் வடிவமைப்பு மொழியை பின்பற்றலாம், இதற்கும் முன்னதாக வெளியான தகவல்கள், நோக்கியா 9 ஆனது ஒரு மேம்பட்ட ஐஆர்ஐஎஸ் ஸ்கேனரைத் தொகுக்கப் போவதாக கூறியிருந்தது. ஆனால் எப்சிசி சான்றிதழ் பக்கங்களில் அப்படியொரு தகவல் ஏதுமில்லை.

ஜனவரி மாதம் 19-ஆம் தேதி

ஜனவரி மாதம் 19-ஆம் தேதி

இவைகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை ஆகவே இதை சிட்டிகை உப்பின் ஒரு அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். இதுவரை வெளியான அம்சங்கள் ஓரு முதன்மை மாதிரியை சுட்டிக்காட்டுவதால் நோக்கியா 9 ஆனது ரூ.50,000/க்கும் மேலான ஒரு விலை நிர்ணயத்தை பெறலாம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி சீனாவில் நடக்கும் நிகழ்வொன்றில், எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை நோக்கியா தொலைபேசிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 9 to Feature Dual 5MP Selfie Cameras, Expected to Launch on January 19. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X