சாம்சங், ஆப்பிள் ஐபோன்களெல்லாம் ஓரம்போ - மிரட்டும் நோக்கியா 9.!

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்திற்கு கடும்போட்டியை விளைவிக்கும் எட்ஜ்-டூ-எட்ஜ் அம்சம் இடம்பெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளது.

|

சந்தைக்குள் மீண்டும் நுழைந்து, ஒரு வியத்தகு ஆளுமையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் நோக்கியா நிறுவனத்தின் புகழும் வளர்ச்சியும் நாம் எதிர்பார்த்த ஒன்று தான்.

சாம்சங், ஆப்பிள் ஐபோன்களெல்லாம் ஓரம்போ - மிரட்டும் நோக்கியா 9.!

இதுவரை உலகம் முழுவதும் பல ரசிகர்கள் கவர்ந்திழுத்துள்ள நோக்கியா நிறுவனத்திடம் நம்மால் எதிர்பார்க்க முடியாத விடயம் ஒன்று இருக்கிறதென்றால் அது - நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடமிருந்து - வெளியாகும் ஸ்மார்ட்போன்களும், அதன் வடிவமைப்புகளும் தான்.!

நோக்கியா 9

நோக்கியா 9

ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்ட பல இடைப்பட்ட சாதனங்களுடன், நோக்கியா நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனத்திற்கு கடும்போட்டியை விளைவிக்கும் எட்ஜ்-டூ-எட்ஜ் அம்சம் இடம்பெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளது.

சற்று மாறுபட்ட பார்வை

சற்று மாறுபட்ட பார்வை

ஸ்மார்ட்போன் உலகில் மிகவும் பேசப்படும் ஸ்மார்ட்போனான நோக்கியா 9 சார்ந்த லீக்ஸ் புகைப்படம் ஒன்றின் மூலம், சாதனத்தின் ஒட்டுமொத்த அம்சங்களையும் அறிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் கூட, முந்தைய கசிவுகள் மற்றும் வதந்திகளுடன் ஒப்பிடுகையில் வடிவமைப்பு மற்றும் டிஸ்பிளே மீதான சற்று மாறுபட்ட பார்வையை அளிக்கிறது.

5.5 இன்ச் டிஸ்ப்ளே

5.5 இன்ச் டிஸ்ப்ளே

சீனாவில் இருந்து வெளியாகியுள்ள இந்த லீக்ஸ் புகைப்படம், நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வரும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றாலும் கூட, போலியானது அல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பெஸல்-லெஸ்

பெஸல்-லெஸ்

இந்த புகைப்படத்தின் கீழ், நோக்கியா 9 ஆனது வெளிப்படையாக எட்ஜ்-டூ-எட்ஜ் 3டி கண்ணாடி டிஸ்பிளேவை காட்சிபடுத்துகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பெஸல்-லெஸ் வடிவமைப்பாகவே தோன்றுகிறது.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

முந்தைய கசிவுகள் மற்றும் வதந்திகளைப் பொறுத்தவரையில், வரவிருக்கும் நோக்கியா 9 சாதனமானது வயர்லெஸ் சார்ஜிங், இரட்டை லென்ஸ் செய்ஸ் கேமரா ஆகியவற்றுடன் கூடிய க்யூஎச்டி தீர்மானம் கொண்டஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறும் என்றே கூறப்பட்டிருந்தது.

எல்இடி பிளாஷ் கொண்ட இரண்டு 13 மெகாபிக்சல்

எல்இடி பிளாஷ் கொண்ட இரண்டு 13 மெகாபிக்சல்

நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், 4கே வீடியோ ரெக்கார்டிங் திறன் கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டது. பின்புறத்தில், ஒரு எல்இடி பிளாஷ் கொண்ட இரண்டு 13 மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெறுமென கூறப்படுகிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி

இந்த சாதனத்தின் மற்றொரு பிரதான அம்சமாக இதன் ரேம் பகுதி திகழ்கிறது. 6ஜிபி / 8ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 அந்த ஐபிP68 சான்றிதழ் பெற்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

மேலும், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குமா என்பது ரகசியமாகவே உள்ளது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் மற்ற வன்பொருள் அம்சங்களை பொறுத்தமட்டில், வெளியான புகைப்படத்தில் கேமராவின் கீழே உள்ள பின்புற பேனலில் ஒரு கைரேகை ஸ்கேனர் இருப்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறது.

சுமார் ரூ.57,896/-

சுமார் ரூ.57,896/-

இந்தியாவில் சுமார் ரூ.57,896/- என்ற விலைமதிப்பை பெறுமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9, அதில் இடம்பெறும அம்சங்களை பொறுத்து விலை நிர்ணயத்தில் வேறுபடலாம். இதற்கு முன்னதாக வெளியான கசிவுகள், நோக்கியா 9 ஆனது பல்வேறு மாறுபாடுகளிலும், பல்வேறு டிஸ்பிளே அளவுகளுடன் வெளிவரும் என்று கூறுகின்றன. எனினும், நோக்கியா 9 பல மாறுபாடுகள் வெளியாகும் என்பதில் எந்த உறுதியும் இல்லை.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

துரதிர்ஷ்டவசமாக, ஏராளமான கசிவுகள் மற்றும் வதந்திகள் வெளியாகியுள்ள கூட, நோக்கியா 9 சாதனத்தின் வெளியீடு பற்றி எந்த குறிப்பும் இல்லை. ஆனால், இந்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நோக்கியா 9 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை நாம் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Nokia 9 display panel leaks touting 5.5-inch edge-to-edge display. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X