ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி & டூயல் கேமரா அமைப்புடன் அசத்தலான நோக்கியா 9.!

By Prakash
|

மொபைல் உலக காங்கிரஸ் 2018 நிகழ்ச்சியில் எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9, நோக்கியா 1 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த நோக்கியா 9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி & டூயல் கேமரா அமைப்புடன் அசத்தலான நோக்கியா 9.

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பொதுவாக ஃப்ளாஷ் ஆதரவுடன் இரட்டை கேமராக்கள் செங்குத்தாக அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவற்றில் கைரேகை ரீடர் இரண்டு கேமராக்களுக்கு கீழே அமைந்துள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

5.5 இன்ச் டிஸ்ப்ளே:

5.5 இன்ச் டிஸ்ப்ளே:

சீனாவில் இருந்து வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் மற்றும் 18:9 என்ற விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பெஸல்-லெஸ் :

பெஸல்-லெஸ் :

நோக்கியா 9 ஆனது வெளிப்படையாக எட்ஜ்-டூ-எட்ஜ் 3டி கண்ணாடி டிஸ்பிளேவை காட்சிபடுத்துகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பெஸல்-லெஸ் வடிவமைப்பாகவே தோன்றுகிறது. மேலும் வடிவமைப்புக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி :

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி :

இந்த சாதனத்தின் மற்றொரு பிரதான அம்சமாக இதன் ரேம் பகுதி திகழ்கிறது. 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 அந்த ஐபிP68 சான்றிதழ் பெற்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3250எம்ஏஎச்:

3250எம்ஏஎச்:

நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 3250எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் மற்ற வன்பொருள் அம்சங்களை பொறுத்தமட்டில், வெளியான புகைப்படத்தில் கேமராவின் கீழே உள்ள பின்புற பேனலில் ஒரு கைரேகை ஸ்கேனர் இருப்பதை மட்டும் உறுதிப்படுத்துகிறது.

Best Mobiles in India

English summary
Nokia 9 design leaked, shows dual camera setup; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X