Home
Mobile

புதிய கேமரா தொழில்நுட்ப வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 9.2

எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் தனது நோக்கியா 9.2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 9.2

நோக்கியா 9.2

வெளிவந்த தகவலின் அடிப்படையில் நோக்கியா 9.2 ஸ்மார்ட்போனில் செல்பீ கேமரா கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட ஒரு சிறந்த தொழில்நுட்ப வசதியுடன்இந்த ஸ்மார்ட்போனில் செல்பீ கேமரா பொறுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட்

தற்சமயம் இந்த நோக்கியா 9.2 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நோக்கியா 9.2 ஸ்மார்ட்போனில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.40,000-விலையில்

நோக்கியா 9.2 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்த சாதனம் ரூ.40,000-விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது நோக்கியா 9 பியூர் வியூ சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 2560x1440 பிக்சல் திர்மானம்

2560x1440 பிக்சல் திர்மானம்

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

20எம்பி செல்பீ கேமரா

20எம்பி செல்பீ கேமரா

12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 9.2 to come with under-display camera : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X