விரைவில்: ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் Nokia 9.2 PureView!

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்த வருடம் அறிமுகம் செய்த நோக்கியா 9பியூர் வியூ ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வரும் மாதங்களில் நோக்கியா 9.2 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட்

தற்சமயம் இந்த நோக்கியா 9.2 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால்,
குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 9.2 பியூர் ஸ்மார்ட்போனில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 9.2 பியூர் வியூ

நோக்கியா 9.2 பியூர் வியூ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இந்த
சாதனம் ரூ.40,000-விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது நோக்கியா 9 பியூர் வியூ சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா?ஆப்பிள் நிறுவனத்துக்கு சவால் விட புதிய அம்சத்தை உருவாக்கும் சாம்சங்: என்ன தெரியுமா?

நோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே

நோக்கியா 9 பியூர் வியூ டிஸ்பிளே

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2560x1440 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா

நோக்கியா 9 பியூர் வியூ கேமரா

12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள் உடன் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் வெளிவருகிறது. பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 845

ஸ்னாப்டிராகன் 845

நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் பொதுவாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர் அமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

வாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்!வாட்ஸ்அப்: 2020ம் ஆண்டில் கிடைக்கப் போகும் சிறப்பான புதிய அப்டேட் இவை தான்!

நோக்கியா 9 பியூர் வியூ மெமரி

நோக்கியா 9 பியூர் வியூ மெமரி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நோக்கியா 9 பியூர் வியூ பேட்டரி

நோக்கியா 9 பியூர் வியூ பேட்டரி

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nokia 9.2 PureView Featuring Snapdragon 865 SoC To Launch In 2020 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X