Home
Mobile

41 மெகா பிக்ஸல் கேமராவுடன் அசத்தும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

By Super

41 மெகா பிக்ஸல் கேமராவுடன் அசத்தும் நோக்கியா ஸ்மார்ட்போன்!
புதிய தொழில் நுட்பங்கள் புதுசா இருந்தா மட்டும் போதாது, அசத்தலாவும் இருக்கனும்னு பல வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்கிறார்கள். அப்படி பல அசத்தலான வசதிகளோட 808 ப்யூர் வியூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது நோக்கியா நிறுவனம். இந்த அற்புதமான தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா-808 ஸ்மார்ட்போன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

பிரம்மிக்க வைக்கும் மொபைல் கண்காட்சியை இன்னும் பிரம்மாண்டப்படுத்தி உள்ளது நோக்கியாவின் ப்யூர் வியூ ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 41 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது.

வாடிக்கையாளர்களின் கண்களை அகல விரிய வைக்கும் இந்த 41 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் எடுக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் எவ்வளவு துல்லியமானதாக இருக்கும் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை. நோக்கியா-808 ஸ்மார்ட்போனில் விஜிஏ முகப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் கொடுக்கும் புகைப்படத்தினையும் தகவல்களையும் இதன் 4 இஞ்ச் அமோல்டு தொழில் நுட்பம் கொண்ட தொடுதிரையில் இன்னும் சிறப்பாக காணலாம். 16 எம் கலர்களுக்கு இந்த திரை வசதி சப்போர்ட் செய்யும்.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள திரையின் மூலம் 360 X 640 திரை துல்லயத்தினையும் பெறலாம். 41 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு இல்லாமலா? கீரல்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க இதில் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அதிக தொழில் நுட்பங்களுக்கு சிறந்த முறையில் சப்போர்ட் செய்ய இதில் ஸ்டான்டர்டு (பிவி-4டி) 1,400 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. 2ஜி வசதிக்கு 11 மணி நேரம் வரை டாக் டைமும், 3ஜி வசதி்க்கு 6 மணி நேரம் 50 நிமிடம் வரை டாக் டைமும் வழங்கும். அதே போல் ஸ்டான்-பை டைமுக்கும் இந்த பேட்டரி சிறந்த வகையில் ஒத்துழைக்கும். இதனால் 2ஜி வசதிக்கு 465 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும், 3ஜி வசதிக்கு 540 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் எளிதாக பெறலாம்.

சர்வதேச மொபைல் கண்காட்சியில் வாடிக்கையாளர்களின் கவணத்தை வெகுவாக ஈர்த்த நோக்கியா-808 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. வருகிற மே மாதம் இந்த நோக்கியா-808 ப்யூர் வியூ ஸ்மார்ட்போன், மொபைல் சந்தையை எகிர வைக்கும் விற்பனையை கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X