பியூர்வியூ-808 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடும் நோக்கியா!

உயர்ந்த கேமராவின் மூலம் அனைவரையும் மூச்சிறைக்க செய்த நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகுமா? என்று கேள்வியோடு காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு விடை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இந்திய மொபைல் மார்கெட்டில் கால் பதிக்க இருக்கிறது.
சமீபத்தில் தான் ஆஷா-202 மற்றும் நோக்கியா-302 மொபைல்களை வெளியிட்ட நோக்கியா நிறுவனம் இதை தொடர்ந்து, நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனையும் இந்தியாவில் களமிறக்க உள்ளது.
சிம்பையன் பெல் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1.3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏஆர்எம்-11 பிராசஸரையும் வழங்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் திரையினை கொண்டது. இதன் திரை அமோலெட் திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இந்த பிரம்மாண்டமான திரை கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளதால், திரைக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்கும். இதில் 41 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் அல்லாமல், விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டது.
இதன் 1,400 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். இந்தியாவில் இந்த மாதம் நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்ற தகவல் மட்டும் தான் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் என்ன விலையில் வெளியாகும் என்ற தகவல்கள் இன்னும் சரிவர வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications