டியூவல் சிம் வசதியுடன் புதிய நோக்கியா 801டி!

By Super
|

டியூவல் சிம் வசதியுடன் புதிய நோக்கியா 801டி!
எப்பொழுதுமே உயர்ந்த தொழில் நுட்பத்தையே கொடுத்து கொண்டிருக்கும் நோக்கியா நிறுவனம் ஒரு புதிய மொபைலை உருவாக்கி இருக்கிறது. நோக்கியா 801-டி என்ற இந்த மொபைலை சீனாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது நோக்கியா.

நோக்கியா வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் ஒரு சிறந்த சாதனமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த 801-டி மொபைலில் சிடிஎம்ஏ சிம் கார்டும் மற்றும் ஜிஎஸ்எம் சிம் கார்டை பொருத்தும் வசதி கொண்டதாக இருக்கும்.

புதிய 801-டி மொபைலினுடைய வெளி தோற்றம் அழகிய வடிவமைப்பை கொண்டது. இந்த மொபைல் 171 கிராம் எடை கொண்டதால் கையில் வைத்திருப்பதற்கு மிகவும் வசதியாக உணராலாம்.

இந்த மொபைல் முழுமையான டச் ஸ்கிரீனை கொண்டது. 4.3 இஞ்ச் திரை கொண்ட இந்த மொபைல் 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும்.

இதன் கேமார வசதி நிச்சயம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கும்.

ஏனென்றால் இப்பொழுதெல்லாம் வாடிக்கையாளர்கள் அதிக பிக்ஸல் கொண்ட கேமராவினை தான் முக்கியமாக கருதுகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இதன் மூலம் அழகான புகைப்படங்களையும் வீடியோவினையும் பெற முடியும்.

இந்த மொபைல் பற்றி குறிப்பிட வேண்டிய முக்கயமான விஷயம், இது நோக்கியா சிம்பையான் 3 இயங்குதளத்தில் இயங்கும். அதுவும் சிம்பையான் அன்னா அல்லது சிம்பையான் பெல் வெர்ஷனிலோ இயங்கலாம்.

டபிள்யூஏபி மற்றும் ஜிபிஆர்எஸ் போன்ற தொழில் நுட்பத்தை வழங்கும் இந்த மொபைலில் பிஎன்எக்ஸ் 6718 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பிராசஸர் பிரவுசிங் மல்டிமீடியா போன்ற தொழில் நுட்பங்களை வேகமாக இயங்க வைக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

நோக்கியா 801-டி மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அனைவரும் வாங்கத் தகுந்த சரியான விலையில் இந்த மொபைல் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X