நோக்கியா 8000 4ஜி ஸ்லைடர் போன் இல்லையா? அப்படினா.. அது இப்படி தான் இருக்குமா?

|

எச்.எம்.டி குளோபல் நோக்கியா நிறுவனம் நோக்கியா 6300 4 ஜி மற்றும் நோக்கியா 8000 4 ஜி என்ற இரண்டு புதிய பியூச்சர் போன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று சமீபத்திய கசிவு தகவல் வெளியாகியது. அதன்படி, இப்போது நோக்கியா 8000 4 ஜி இன் போஸ்டர் இணையத்தில் கசிந்துள்ளது, வடிவமைப்பு விவரங்களும் அதன் முக்கிய சிறப்பம்சங்களும் தற்பொழுது ஆன்லைனில் வெளியாகியுள்ளது.

நோக்கியா 8000 4 ஜி

நோக்கியா 8000 4 ஜி

வின்ஃபியூச்சர் (WinFutre) பகிர்ந்த நோக்கியா 8000 4 ஜி இன் போஸ்டரின் படி, அசல் நோக்கியா 800 சீரிஸ் போன்களில் காணப்படும் ஸ்லைடர் வடிவமைப்பை இந்த புதிய போன் கொண்டிருக்காது என்பது இப்பொழுது உறுதியாகியுள்ளது. இது பிரீமியம் கிளாஸ் போன்ற வடிவமைப்பு, '3D கர்வுடு கிளாஸ்' வடிவமைக்கப்பட்ட கீபேட் உடன் வருகிறது. நோக்கியாவின் மற்ற பியூச்சர் போன்களுடன் ஒப்பிடும்போது, ​​நோக்கியா 8000 4 ஜி கர்வுடு விளிம்புகளைக் கொண்டிருக்கும்.

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளதா?

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளதா?

புதிய நோக்கியா 8000 4 ஜி பியூச்சர் போன் மாடல், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உடன் வரும் என்று சமீபத்திய அறிக்கை கூறியுள்ளது. இந்த புதிய பியூச்சர் போன் 4 ஜி மற்றும் வைஃபை ஹாட்ஸ்பாட்டுக்கான ஆதரவைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போன் ஒற்றை சிம் மற்றும் டூயல் சிம் எடிஷன் என்று இரண்டு எடிஷனாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கியில் சம்பள கணக்கு இருக்கா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஜனவரி 1 முதல் புதிய திட்டம்..

நோக்கியா 8000 4ஜி போனின் போஸ்டர்

நோக்கியா 8000 4ஜி போனின் போஸ்டர்

இணையத்தில் வெளியாகியுள்ள புதிய நோக்கியா 8000 4ஜி போனின் போஸ்டர், போனை கருப்பு நிறத்தில் காட்டுகிறது, ஆனால் நோக்கியா 8000 4 ஜி மேலும் பல வண்ண விருப்பங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் 320 x 240 பிக்சல் கொண்ட 2.8' இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டிருக்கும். இது ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் மற்றும் 512MB ரேம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

மாத இறுதியில் அறிமுகமா?

மாத இறுதியில் அறிமுகமா?

கூடுதல் சேமிப்பகத்திற்காக, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய வசதியை இந்த புதிய நோக்கியா 8000 4 ஜி வழங்கும் என்று செய்திகள் கசிந்துள்ளது. இந்த பியூச்சர் போன் 2 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும், KaiOS இயங்குதளம் மற்றும் 1,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன், இந்த மாத இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 8000 4G key specs and design leaked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X