Home
Mobile

மீண்டும் வருகிறது Nokia போன்.. IP68 ரேட்டிங்.. USB-C போர்ட்.. 2100mAh பேட்டரி.. எந்த மாடல்?

கடந்த மாதம் இறுதியில், HMD (எச்எம்டி) குளோபல் நோக்கியாவுடனான அதன் உரிம ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளதாக என்ற செய்தி வந்தது. இப்போது அந்த புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மையின் முதல் முடிவு, ஒரு புதிய கரடுமுரடான கீபேட் மொபைல் போன் விரைவில் வெளிவர இருக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இரண்டாம் தலைமுறை (second-generation) நோக்கியா 800 டஃப் (Nokia 800 Tough) மாடலை எச்எம்டி நிறுவனம் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் முதன்மை மாடல் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, மேலும் அதன் பெயர் குறிப்பிடுவது போல, அது நீடித்துத் தாங்கும் வலிமையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

மீண்டும் வருகிறது Nokia போன்.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

நோக்கியா 800 டஃப் விவரக்குறிப்புகள் (Nokia 800 Tough Specifications)

ஆறு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் தலைமுறை நோக்கியா 800 டஃப் வெளியாக இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதுவும் விரைவில் வெளியாக உள்ள புதிய நோக்கியா போனில் பழைய microUSB போர்ட்-க்கு பதிலாக USB-C போர்ட் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரண்டாம் தலைமுறை நோக்கியா 800 டஃப் மாடல் KaiOS 2.5.2-க்கு பதிலாக KaiOS 3.1 இயங்குதளம் மூலம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மொபைல் போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 2019-ம் வெளியான முதல் மாடலை போலவே இந்த புதிய மாடலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது ஆன்லைனில் வெளியான புது நோக்கியா 800 டஃப் போன் படங்களில் சிங்கிள் ரியர் கேமரா உள்ளது. அதன் ஒரு பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் மறுபக்கத்தில் ஸ்பீக்கர் கிரில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய நோக்கியா போன் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் MIL-STD-810G தரச் சான்றிதழ் உடன் இந்த புதிய நோக்கியா மொபைல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நோக்கியா 800 டஃப் போன் ஆனது 2.4-இன்ச் டிஎப்டி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 சிப்செட், 512எம்பி ரேம், 2எம்பி ரியர் கேமரா, வைஃபை, ப்ளூடூத் 4., ஜிபிஎஸ் போன்ற அம்சங்களைக் கொண்டிருந்தது.

அதேபோல் அந்த மொபைல் போனில் 2100எம்ஏஎச் பேட்டரி வசதியும் இருந்தது. விரைவில் வெளியாகும் இரண்டாம் தலைமுறை நோக்கியா 800 டஃப் முதல் போனின் அம்சங்களை கொண்டிருக்கும், ஆனால் லேசான அப்டேட்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நோக்கியா 800 டஃப் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்டிஎம் நிறுவனம்.

அதுவும் புதிய நோக்கியா 800 டஃப் போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் முதலில் இந்த நோக்கியா போன் ஐரோப்பாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia 800 Tough second generation is being developed: May be launched soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X