லுமியா-800 போனின் பேட்டரி கோளாறை சரி செய்த நோக்கியா!

Posted By: Staff
லுமியா-800 போனின் பேட்டரி கோளாறை சரி செய்த நோக்கியா!
தனது லுமியா-800 போனின் பேட்டரி கோளாறை சரி செய்து தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது நோக்கியா.

புதிய தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவது மட்டும் அல்லாமல், அதை வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையிலும் கொடுத்து வருகிறது நோக்கியா நிறுவனம். எதிர் பாராத விதமாக நோக்கியா லுமியா-800 சிரீஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி நீண்ட நேரம் உழைப்பதில்லை என்ற பிரச்சனைக்கு தீர்வு கொடுத்துள்ளது நோக்கியா.

மைக்ரோசாஃப்டு விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் முதலில் பேட்டரியில் சில பிரச்சனைகள் உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் எழுந்தது. பேட்டரியில் ஏற்பட்ட பிரச்சனையை நோக்கியா சரி செய்து நீடித்து உழைக்கும் வகையில் கொடுத்துள்ளது. இன்னும் ஒரு உண்மை என்னவென்றால் இதில் பேட்டரி சம்மந்தமான பிரச்சனைகள் ஏதும் இல்லை என்றும், இதன் சாஃப்ட்வேரில் ஏற்பட்ட பிரச்சனை என்றும் நோக்கியா தெளிவாக கூறியுள்ளது.

சாஃப்டுவேரில் ஏற்பட்ட இந்த பிரச்சனை இப்போது சரி செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறுகள் ஏதும் ஏற்பட்டுவிட கூடாது என்பதிலம் நோக்கியா கவனம் செலுத்தி வருகிறது.

நோக்கியா லுமியா-800 பற்றி இதற்கு முன்பு வெளியான தகவலை இங்கே படிக்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்