Home
Mobile

நோக்கியா லூமியா, லெனோவா லீ போன்: ஒப்பீடு

By Super

நோக்கியா லூமியா, லெனோவா லீ போன்: ஒப்பீடு
எலக்ட்ரானிக் உலகில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து வைத்திருக்கும் இரண்டு நட்சத்திர நாயகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறது நோக்கியாவும், லெனோவோ நிறுவனமும்.

நோக்கியா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் லுமியா-800 மொபைலுக்கும், லெனோவோ அறிமுகம் செய்யப் போகும் லீபோன் மொபைலுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இரு மொபைல்களுக்கும் இடையிலான அம்சங்களை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.


நோக்கியா மொபைல் லுமியா-800 3.7 இஞ்ச் அமோல்டு தொடுதிரை தொழில் நுட்பத்தையும் கொண்டது. லெனோவோ லீபோன் மொபைல் 3.7 இஞ்ச் டிஎப்டி திரையை வழங்குகிறது.

இந்த இரண்டு மொபைல்களிலுமே புளூடூத், யூஎஸ்பி, வைபை போன்ற தொழில் நுட்பங்களை கொடுக்கின்றது.

நோக்கியா லுமியா-800 மொபைல் விண்டோஸ் போன் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குகிறது.

ஆனால் லெனோவோ லீபோன் மொபைல் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் மூலம் இயங்குகிறது.

லுமியா-800 மொபைலில் 512 எம்பி ரேம் வசதியையும், லெனோவோ லீபோன் 256 எம்பி ரேம் வசதியையும் கொண்டுள்ளது.

லெனோவோ நிறுவனத்தின் ஸ்மார்ட் மொபைலான லீபோன் மொபைலில் 1,000 எம்ஏஎச் கியூள்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க பெரிதும் துணை புரிகிறது.

நோக்கியாவின் லுமியா-800 மொபைல் 1,400 எம்எச்இசட் கியூவள்காம் எம்எஸ்எம்-8255 பிராசஸரை கொண்டுள்ளது.

இந்த இரண்டு மொபைல்களும் அனைத்து ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் ஃபார்மெட்களுக்கும் சப்போர்ட் செய்யும்.

லூமியா-800 8 மெகா பிக்ஸல் கேமராவினைக் கொண்டுள்ளதால் 3984 X 2992 பிக்ஸல் துல்லியத்தை பெற முடியும். அதோடு 3X டிஜிட்டல் சூம் வசதியையும் இது பெற்றுள்ளது.

லெனோவோ லீபோன் மொபைலில் 3.1 மெகா பிக்ஸல் கேமராவுடன் 1X ஆப்டிக்கல் கொடுக்கப்பட்டுள்ளது.

லுமியா-800 மொபைலில் 1,450 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி 9.5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், 335 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியையும் கொடுக்கின்றது.

லெனோவோ லித்தியம் அயான் 1,500 எம்ஏஎச் பேட்டரியும் நீண்ட நேரம் உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

மிக உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட் மொபைல் போன்களின் விலை சரியாகத் தெரியவரவில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை நிச்சயமாக சொல்லலாம். இந்த இரண்டு மொபைல்களுமே வாடிக்கையாளர்களின் தேகைகளை நன்கு பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X