ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி & டூயல் ரியர் கேமராவுடன் நோக்கியா 8 அறிமுகம்.!

நோக்கியா 8 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 மற்றும் அட்ரினோ 540 ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது.

By Prakash
|

எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று நோக்கியா 8 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஒசி செயலி மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அமேசான் ஆன்லைனில் பிரத்தியேகமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.36,999 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.3-இன்ச் டிஸ்பிளே:

5.3-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

நோக்கியா 8 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 மற்றும் அட்ரினோ 540 ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 13எம்பி டூயல் ரியர் கேமரா:

13எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3090எம்ஏஎச்:

3090எம்ஏஎச்:

நோக்கியா 8 பொறுத்தவரை 3090எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8 With Snapdragon 835 SoC Dual Cameras Launched in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X