நோக்கியா 8 : ஸ்னாப்டிராகன் 835எஸ்ஓசி, டூவல் கேம் உடன் எப்போ ரீலிஸ்.?

என்னென்ன அம்சங்கள், என்னென்ன சேமிப்பு மாறுபாடுகள்.? என்ன விலை நிர்ணயம் கொண்டுள்ளது.? எப்போது வெளியாகும்.?

|

நோக்கியா நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன்களான நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆகிய கருவிகளை பார்சிலோனாவில் நிகழ்ந்த எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் நோக்கியா 3310 கருவியுடன் சேர்த்து அறிமுகம் செய்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நோக்கியா 8 : ஸ்னாப்டிராகன் 835எஸ்ஓசி, டூவல் கேம் உடன் எப்போ ரீலிஸ்.?

எனினும் நோக்கியா நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட தலைமை ஸ்மார்ட்போன் கருவிகள் சார்ந்த அறிவிப்புகள் எதுவுமில்லை என்பது பல வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது

அந்த கவலையை போக்கும் வண்ணம் தற்போது புதிய தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதுவும் ஒன்றல்ல, நம் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் இரண்டு புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.!

ஜூன் மாதம்

ஜூன் மாதம்

வெளியான புதிய தகவலின் கீழ் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி கொண்ட ஒரு தலைமை நோக்கியா ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கிறது.

இரண்டு அளவு வகைகளில்

இரண்டு அளவு வகைகளில்

அதுமட்டுமின்றி அக்கருவி நோக்கியா 8 கருவியாக இருக்கக்கூடும் மற்றும் அக்கருவி இரண்டு அளவு வகைகளில் கிடைக்கும் என்றும் வெளியான தகவல் பரிந்துரைத்துள்ளது.

ரேம்

ரேம்

அதாவது சீன வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த புதிய வதந்தியின் படி, நம்பப்படும் நோக்கியா தலைமை ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு நினைவக விருப்பங்களில் - 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் கொண்டு கிடைக்க செய்யப்படும்.

உலோக வடிவமைப்பு

உலோக வடிவமைப்பு

உடன் ஒரு ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் இக்கருவி யூனிபாடி உலோக வடிவமைப்பு கொண்டு வெளியாகலாம் மற்றும் இதன் காட்சி அளவு பற்றிய தகவல்கள் இல்லை எனினும் இந்த நோக்கியா தலைமை ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்க்ரீன் அளவுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா

கேமரா

ஒளியியல் அடிப்படையில், இந்த நோக்கியா தலைமை சாதனம் ஆனது "குறைந்தது" 23-மெகாபிக்சல் முதன்மை கேமரா அமைப்பு கொண்டு வரும் என்கிறது வெளியான அறிக்கை மற்றும் சுவாரஸ்யமாக வெளியாகும் இரண்டு வகைகளில் ஒரு கருவி இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்த தலைமை ஸ்மார்ட்போனின் சிறிய அளவிலான மாறுபாடு சுமார் ரூ.38,600/ என்ற விலை நிர்ணயம் பெறலாம் மற்றும் பெரிய அளவிலான மாறுபாடு சுமார் ரூ. 43,500/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ல் ஜெய்ஸ் அல்லது ப்யூர்வியூ

கார்ல் ஜெய்ஸ் அல்லது ப்யூர்வியூ

குறிப்பாக, இந்த தலைமை சாதனமானது அதிகாரப்பூர்வமாக கார்ல் ஜெய்ஸ் அல்லது ப்யூர்வியூ தொழில்நுட்பம் கொண்டிருக்காது என்பதை இந்த தகவல் தெளிவுபடுத்தியுள்ளது. இவைகள் எல்லாமே வதந்தி அம்சங்கள் தான் எனவே இதிலிருந்து உப்பின் ஒரு சிட்டிகை அளவிலாக தகவலை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

90% பயனர்களுக்கு தெரியாத 7 ஆண்ட்ராய்டு இரகசியங்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 8 with Snapdragon 835 SoC, dual-camera setup could launch in June. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X