ரூ.7999/-க்கு அறிவிக்கப்பட்டுள்ள நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் இன்னொரு சர்பரைஸ்.!

|

இந்திய நோக்கியா பிரியர்களுக்கு மேலுமொரு நற்செய்தி. நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேமிப்புத்திறன் அதிகரிப்பட்ட ஒரு நோக்கியா 8 மாறுபாடு சார்ந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரூ.7999/- மதிப்புள்ள நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் இன்னொரு சர்ப்ரைஸ்.!

பெரிய சேமிப்பு மற்றும் ரேம் கொண்ட ஒரு புதிய நோக்கியா 8 அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் ஆணையத்தின் (FCC) பட்டியலில் காணப்பட்டுள்ளது.

6 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம்

இதற்கு முன்னர், நோக்கியா பவர் யூசர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் நோக்கியா 8 சாதனத்தின் சேமிப்பை திறனை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி என்று மாற்றியமைப்பதாக தெரிவித்திருந்த நிலைப்பாட்டில், இந்த அறிக்கை நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் மாறுபாட்டை உறுதிப்படுத்துகிறது.

ஆண்ட்+ அம்சம்

ஆண்ட்+ அம்சம்

ரேம் மற்றும் மெமரி அதிகரிப்பு மட்டுமின்றி, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா 8-இல் ஆண்ட்+ (ANT+) மற்றும் டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) பேன்ட் நான்கு ஆகிய அம்சங்களையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

நிகழ்நேரத்தில் கண்காணிப்பு

நிகழ்நேரத்தில் கண்காணிப்பு

ஆண்ட்+ அம்சமானது, சாதனங்களில் நிகழ்நேரத்தில் உங்கள் விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் சுகாதார கண்காணிப்புத் தரவைக் காண அனுமதிக்கும். நினைவூட்டும் வண்ணம், லண்டனில் கடந்த மாதம் நோக்கியா 8 அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்னாப்டிராகன் 835

ஸ்னாப்டிராகன் 835

ஆண்ட்ராய்டில் இயங்கும் நோக்கியாவின் முதல் தொலைபேசி இதுதான். ஒரு ஸ்னாப்டிராகன் 835 மூலம் இயக்கப்படும் இந்த தொலைபேசி 4ஜிபி ரேம் உடனான அட்ரெனோ 540 ஜிபியூ உடன் இணைந்து செயல்படுகிறது.

க்விக் சார்ஜ் 3.0 ஆதரவு

க்விக் சார்ஜ் 3.0 ஆதரவு

மேலும் நோக்கியா 8 ஆனது க்விக் சார்ஜ் 3.0 ஆதரவு கொண்ட ஒரு 3090எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட இக்கருவி 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வாங்குகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட 5.3 அங்குல க்வாட் எச்டி டிஸ்ப்ளே மற்றும் ஒரு ஸேய்ஸ் இரட்டை பின்புற கேமரா அமைப்பும் -13MP முதன்மை ஆர்ஜிபி (வண்ணம்) சென்சார் மற்றும் 13எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார் - கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு ஓரியோ

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ மேம்படுத்தலும் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் நோக்கியா 8 இந்தியாவில் அறிமுகமாகிறது.

விலைப்புள்ளி

விலைப்புள்ளி

புது தில்லி நடக்கும் அறிமுகம் நிகழ்வொன்றில் இந்த தொலைபேசி அறிவிக்கப்படும். மேலும் இதன் விற்பனையானது, அக்டோபர் இரண்டாம் வாரத்தில் இருந்து ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் ரூ.7,999/- என்ற விலைப்புள்ளியில் இருந்து தொடங்கும்.

Best Mobiles in India

English summary
Nokia 8 with 6GB RAM, model numbers TA-1004 and TA-1012 spotted online. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X