Subscribe to Gizbot

நோக்கியா 8: நம்பி வாங்கலாமா, வேண்டாமா.? கவனிக்கவேண்டிய 7 மேட்டர்கள்.!

Written By:

இறுதியாக நாம் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. நோக்கியா அதன் முதல் ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை இன்று லண்டனில் நடைபெறும் நிகழ்வில் (வியாழக்கிழமை 12 மணி) அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. கடந்த சில மாதங்களில் நோக்கியா 8 பற்றிய பல்வேறு கசிவுகள் மற்றும் வதந்திகளுக்கு பின்னர் இந்த ஆண்டின் மிகவும் உற்சாகமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக நோக்கியா 8 இன்று திரைமறைவில் இருந்து வெளிப்படுத்திக்கொள்கிறது.

நோக்கியா 8: நம்பி வாங்கலாமா, வேண்டாமா.? கவனிக்கவேண்டிய 7 மேட்டர்கள்.!

நோக்கியா 8 ஆனது நோக்கியாவின் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மட்டுமல்லாமல், பின்னிஷ் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயக்கத்தில் வெளியிடும் முதல் உயர் இறுதி ஸ்மார்ட்போனாகவும் இருக்கும். முந்தைய லீக்ஸ் தகவல்கள் நோக்கியா 9 தான் நோக்கியா நிறுவனத்தின் முதல் ஹை-எண்ட் ஆண்ட்ராய்டு கருவியாக இருக்குமென்று முந்தி வெளியாகும் நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் நாம் வேண்டிய 7 முக்கியமான விடயங்கள் உள்ளன, அவைகள் என்னென்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கவனிக்க வேண்டிய விடயம் #01

கவனிக்க வேண்டிய விடயம் #01

இவான் பிளாஸ் வெளியிட்ட லீக்ஸ் படங்களைப் பொறுத்தவரையில், நோக்கியா 8 முற்றிலும் உலோகத்திலிருந்து தயாரிக்கப்பட்டு நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய கருவிகளில் காணப்படும் வடிவமைப்பு மொழியை முன்னெடுத்துச் செல்லும் மற்றும் ஒரு செங்குத்து இரட்டை கேமரா அமைப்பு, 16: 9 அளவிலான திரையில் ஹோம் பொத்தான் ஆகிய அம்சங்களுடன் நீலம், எஃகு, தங்கம் / நீலம் மற்றும் தங்கம் / செம்பு ஆகிய நான்கு நிறங்களில் இது கிடைக்கும்.

கவனிக்க வேண்டிய விடயம் #02

கவனிக்க வேண்டிய விடயம் #02

ஸ்மார்ட்போன் ஒரு பெஸல் லெஸ் வடிவமைப்பு கொண்டு வரவில்லை என்றாலும், மிகவும் திடமான தொட்டி போன்ற நோக்கியாவின் கடினமான வடிவமைப்பு மரபை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் வடிவமைப்பு இயக்குனரின் கருத்துப்படி "கடினமான அதே சமயம் உங்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அழகான ஸ்மார்ட்போனாக" நோக்கியா 8 இருக்கலாம்.

கவனிக்க வேண்டிய விடயம் #03

கவனிக்க வேண்டிய விடயம் #03

நோக்கியா 8 ஆனது க்வால்காம் நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் சிறந்த செயலி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது - அதாவது, ஸ்னாப்டிராகன் 835 அல்லது உடனான 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம், அட்ரெனோ 540 ஜிபியூ மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை விரிவாக்கத்துடனான 64ஜிபி உள் சேமிப்பு ஆகியவைகளை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜ் 4.0-க்கு ஆதரவாக வர உள்ளது.

கவனிக்க வேண்டிய விடயம் #04

கவனிக்க வேண்டிய விடயம் #04

நோக்கியா 8 ஒரு 5.3 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே கொண்டு 2560 x 1440 என்ற தீர்மானம் கொண்ட கொரில்லா கிளாஸ் 5 மற்றும் கீறல்களுக்கு எதிராக பாதுகாக்கும் டிஸ்பிளே கொண்டு வெளியாகலாம். இது நோக்கியா வர்த்தக முத்திரையான கிளியர்பிளாக் டிஸ்பிளே தொழில்நுட்பத்துடன் வரக்கூடும். மல்டிமீடியா அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 3.5மிமீ ஹெட்ஜாக் டால்பி அட்மோஸ் ஆடியோ மற்றும் 'ஓஸோ ஆடியோ' மேம்பாடுகளை கொண்டுள்ளது.

கவனிக்க வேண்டிய விடயம் #05

கவனிக்க வேண்டிய விடயம் #05

புகைப்படம் எடுக்கும்போது பதிவாகும் நிறுவனத்தின் செல்வந்த பாரம்பரியத்தை நோக்கியா 8 தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இரண்டு 13எம்பி சென்சார்கள் மற்றும் ஒரு இரட்டை எல்இ டிஃப்ளாஷ் கொண்ட மற்றும் கார்ல் ஜீஸ் லென்ஸ் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டு வரலாம். மேலும் புதிய வதந்தியொன்று இதன்சென்சார்கள் ஒரு மோனோக்ரோன் உணரியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றன. செல்பீ கேமராவை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி கேமரா இருக்கும் மற்றும் பின்புற கேமரா 4கே வீடியோ பதிவுக்கு ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டிய விடயம் #06

கவனிக்க வேண்டிய விடயம் #06

நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்றே நோக்கியா 8 கருவியும் மிகவும் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும். எல்லா நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கும் மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகளும் ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பும் உரிய நேரத்தில் கிடைக்கும் என்று எச்எம்டி க்ளோபல் நிறுவனம் உறுதியளித்துள்ளது. வெளியான நோக்கியா 3 கருவி போலல்லாம நோக்கியா 8 ஆண்ட்ராய்டுடன் 7.1.1 பெட்டியுடன் ஷிப்பிங் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டிய விடயம் #07

கவனிக்க வேண்டிய விடயம் #07

சமீபத்திய லீக்ஸ் ஒன்று சாம்சங் கேலக்ஸி எஸ்8-இன் அடிச்சுவடுகளை நோக்கியா 8 பின்பற்றும், அதாவது ஐரிஸ் ஸ்கேனருடன்வெளியாகலாம். இது உண்மையானதாக இல்லாவிடில் நோக்கியா 8 கைபேசி அதன் ஹோம் பொத்தானில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மற்றும் 4ஜி எல்டிஇ மற்றும் டூயல் சிம் ஆதரவளிக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Nokia 8: What to expect from Nokia's first Android flagship phone launching today. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot