6ஜிபி ரேம் உடன் வெளிவரும் அட்டகாசமான நோக்கியா 8.!
இக்கருவி 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் நோக்கியா 8 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது, இதறக்கு முன்பு நோக்கியா 8 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,800- வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

5.3-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 835 :
நோக்கியா 8 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

3090எம்ஏஎச்:
நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் 3090எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications