யாருமே எதிர்பார்க்க்க வண்ணம் வெளியாகும் நோக்கியா 8 "சிராக்கோ".!

இது உண்மையானால் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி சிப்செட் கொண்டு வெளியாகும் முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும்.

|

நோக்கியா 8 சிராக்கோ என்கிற நோக்கியா 8 (2018) ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி உடன் வெளியாகுமென சமீபத்திய அறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையானது நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் 2018 பதிப்பானது நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் வெளியாகும் என்றும் கூறியுள்ளது. இது உண்மையானால் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி சிப்செட் கொண்டு வெளியாகும் முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கும்.

திரை விகிதம்

திரை விகிதம்

இதர அம்சங்களை பொறுத்தமட்டில், கூறப்படும் நோக்கியா 8 சிராக்கோ ஆனது 6 ஜிபி ரேம் உடனாக அதன் சிப்செட் உடன் இணைக்கப்படும். மேலும் 3250எம்ஏஎச் அளவிலான பேட்டரி கொண்டு ச்கதியூட்டப்படும். மேலும், இந்த தொலைபேசியானது 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டுவருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 8 சிராக்கோ

நோக்கியா 8 சிராக்கோ

கடந்த 2006 ஆம் ஆண்டில் வெளியாகி நிறுவனத்திற்கு பெரும் புகழை தேடிக்கொடுத்த நோக்கியா 8800 சிராக்கோ மொபைலின் நினைவாகவே நோக்கியா 8 ஆனது நோக்கியா 8 சிராக்கோ என்று மறுபெயரிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

மாடல் எண் டிஏ-1005

மாடல் எண் டிஏ-1005

இன்னும் சொல்லப்போனால் அந்த நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போன் ஆனது ஒரு அஞ்சலியாகவே கருதப்படுகிறது. சமீபத்தில் இந்த நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போன் ஆனது மாடல் எண் டிஏ-1005 என்கிற பெயரின் கீழ் சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்கவில்லை

யாரும் எதிர்பார்க்கவில்லை

இதில் இன்னும் ஆச்சரியமளிக்கும் விடயம் என்னவெனில், இந்த மாத இறுதியில் நிகழும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் இக்கருவி அறிமுகமாக வாய்ப்புள்ளது. நிறுவனமானது ஒரு புதிய நோக்கியா 8 மாடலில் வெளி செய்வதாகவும், அது ஒரு 2018 பதிப்பாக இருக்குமென்றும் வதந்திகள் வெளியாகின. ஆனால் இவ்வளவு விரைவில் தொடங்கப்படுவதாக யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

இதற்கு முன்னர் வெளியான அனைத்து அறிக்கைகளுமே இக்கருவி ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி சிப்செட்டை பரிந்துரைக்க்கும் மறுகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு சீன ஊடக அறிக்கையானது மட்டும் நோக்கியா 8 சிராக்கோ ஆனது ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்குமென்று கூறியுள்ளது.

13 எம்பி செல்பீ கேமரா

13 எம்பி செல்பீ கேமரா

இது நடந்தால் நோக்கியா 8 சிரோக்கோ அல்லது நோக்கியா 8 (2018) ஆனது அசல் நோக்கியா 8-ஐ விட ஒரு பெரிய மேம்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். மற்ற வதந்திகளில் வெளியான அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி 18: 9 காட்சி விகிதம், 12எம்பி+13எம்பி என்கிற டூயல் ரியர் கேமரா, ஒரு 13 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கும்

ஐபி67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு

ஐபி67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு

மேலும் இக்கருவியின் அனைத்து கேமராக்களும் செய்ஸ் சான்றிதழ் கொண்டிருக்கும். மேலும் வெளியான வதந்திகளானது நோக்கியா 8 சிராக்கோ ஆனது ஐபி67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழும் கொண்டுவரும் என்கின்றன.

விலை

விலை

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும் இந்த தொலைபேசியானது, முன்னர் குறிப்பிட்டபடி 3250எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கலாம். இதன் இந்திய வெளியீடும் விரைவில் நிகழலாம். ஏனெனில் இதன் வருகையை மனதிகொண்டு தான் நோக்கியா 8 (அசல்) ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டது.

நோக்கியா 1, நோக்கியா 9, நோக்கியா 7

நோக்கியா 1, நோக்கியா 9, நோக்கியா 7

நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 1, நோக்கியா 9, நோக்கியா 7, நோக்கியா 6 (2018) ஆகிய ஸ்மார்ட்போன்களும் எம்டபுள்யூசி 2018-ல் வெளியாகலாம். மேலும் பல ஸ்மார்ட்போன் வெளியீடு, அம்சங்கள் மற்றும் லீக்ஸ் தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Nokia 8 Sirocco Expected to Launch at MWC 2018 With Snapdragon 845 SoC. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X