ஆகஸ்ட் 16-ல் நோக்கியா 8, நோக்கியா 9 மற்றும் நோக்கியா 3310 3ஜி வெளியீடு.?
நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு அம்சம் கொண்டிருக்கும் என்பது உறுதி.
நோக்கியா பிரண்ட் கருவிகளை உற்பத்தி செய்யும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், விரைவில் அதன் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 8 கருவியை வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதி லண்டனில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த நிகழ்வில் நோக்கியா 3310 கைபேசியின் 3ஜி பதிப்பும் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவின் முக்கிய வெளியீடான நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு அம்சம் கொண்டிருக்கும் என்பது உறுதி.

கார்ல்-ஜீஸ் ஒளியியல்
மேலும் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி இணைந்த கார்ல்-ஜீஸ் ஒளியியல் மூலம் கேமரா இயக்கப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய அண்ட்ராய்டு 7.1.1 இயக்க முறைமையை கொண்டு இயங்கலாம். எஃகு, தங்கம் / செம்பு, நீலம் மற்றும் தங்கம் / நீலம் ஆகிய வண்ணங்களில் நோக்கியா 8 வரவிருக்கிறது.

நோக்கியா 9
அம்சங்கள் சார்ந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், இந்த நிகழ்வில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாமென்று எதிர்பார்க்கபப்டுகிறது. நோக்கியா 9 அம்சங்களை பொறுத்தமட்டில் க்வால்காமின் சமீபத்திய ஸ்னாப்ட்ராகன் 835 மற்றும் நோக்கியா ஓஸோ ஆடியோ மேம்பாடுகளை வெளிப்படுத்தும் முதல் நோக்கியா சாதனமாக வெளியாகலாம்.

5.5 அங்குல க்யூஎச்டி ஓஎல்இடி டிஸ்பிளே
மேலும் இக்கருவியில் அட்ரெனோ 540 ஜிபியூ. உடன் இணைந்த 5.5 அங்குல க்யூஎச்டி ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம். 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி உள் சேமிப்புடன் வரலாமென்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் இயங்குதளத்தில் இயக்கப்படும்.

இரட்டை கார்ல்-ஜீஸ் கேமரா
உடன் க்வால்காம் பாஸ்ட்-சார்ஜ் 4 ஆதரவுடனான 3800எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும். கேமராவை பொறுத்தவரை, பின்பக்கம் ஒரு 22 மெகாபிக்சல் இரட்டை கார்ல்-ஜீஸ் கேமரா மற்றும் முன்பக்கம் செல்பீக்களுக்கான ஒரு 12 மெகாபிக்சல் கேமரா இடம்பெறலாம்.

விலை நிர்ணயம்
நோக்கியா 8 சாதனத்தின் இதர அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஆதரவுடன், 5.3 இன்ச் க்யூஎச்டி டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி (மைக்ரோ எஸ்டி அட்டை ஆதரவுடன்) உள் சேமிப்புடன் இந்தியாவில் ரூ.40,000/- என்ற விலை நிர்ணயத்தில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications