நோக்கியாவின் பெஸ்ட் கருவிகளாக களமிறங்கும் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 8 ப்ரோ.!

வெளியான நோக்கியா 8 சிராக்கோ பற்றிய லீக்ஸ் தகவலைகள் ஆனது அதை நோக்கியா 9 ஆக இருக்க வேண்டும் என்றே பரிந்துரைத்தன.

|

கடந்த 2017-ஆம் ஆண்டில் பல வகையான விலை நிர்ணயத்தின் கீழ் பல தரப்பட்ட ஸ்மார்ட்போன்களை (பிரபல நோக்கியா 3310 பீச்சர் போன் உட்பட) அறிமுகம் செய்து, இழந்த நோக்கியா பிராண்டின் பெயரை மீட்டெடுத்த க்ளோபல் எச்எம்டி நிறுவனமானது மீண்டுமொரு ஒரு கொத்து நோக்கியா கருவிகளை இந்த 2018 ஆம் ஆண்டிலும் வெளியிடவுள்ளது.

நோக்கியாவின் பெஸ்ட் கருவிகளாக களமிறங்கும் நோக்கியா 9 & நோக்கியா 8 ப்ரோ

ஏற்கனவே நோக்கியா 8110 4ஜி பனானா பீச்சர் போன், நோக்கியா 1 அண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன், நோக்கியா 6 (2018), நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 8 சிரோக்கோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டில், மேலும் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

நோக்கியா 9

நோக்கியா 9

வெளியான நோக்கியா 8 சிராக்கோ பற்றிய லீக்ஸ் தகவலைகள் ஆனது அதை நோக்கியா 9 ஆக இருக்க வேண்டும் என்றே பரிந்துரைத்தன. ஆக நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது இன்னும் தயாரிப்பின்கீழ் தான் இருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

சந்தேகமே வேண்டாம்

சந்தேகமே வேண்டாம்

உடன் இன்ப அதிர்ச்சியாக நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனும் தயாராகி வருகிறது. இந்த இரு கருவிகளுமே 2018-ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் நோக்கியா நிறுவனத்தின் 2018 பிளாக்ஷிப் கருவிகளாக இருக்குமென்பதால் சந்தேகமே வேண்டாம்.

டூயல் கேமரா

டூயல் கேமரா

நோக்கியா 8 சிராக்கோ ஆனது ஒரு கவர்ச்சிகரமான கருவியாக உள்ளது. ஒரு 5.5 அளவிலான (1440x2560) டிஸ்பிளே, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது. உடன் டூயல் கேமரா அமைப்பும் கொண்டுள்ளது. எப் /1.75 துளை கொண்ட 12எம்பி முதன்மை கேமரா மற்றும் எப் / 2.6 துளை கொண்ட 13 மெகாபிக்சல் இரண்டாம் தொலைநிலை சென்சார் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

கூறப்படும் நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனும் இதேபோன்றே ஹை-எண்ட் அம்சங்களை கொண்டிருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக நோக்கியா 8 ப்ரோ ஆனது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்கலாம் இது உண்மையானால் நோக்கியா 8 சிரோக்கோவுடன் ஒற்றுப்போகும்.

நோக்கியா 8 ப்ரோ மட்டுமின்றி

நோக்கியா 8 ப்ரோ மட்டுமின்றி

வெளியான சமீபத்திய அறிக்கையானது நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனை மட்டுமின்றி எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களையும் வெளிப்படுத்துகிறது. அதன்படி நோக்கியா 9 ஸ்னாப்ட்ராகன் ஆனது 845 சிப்செட் உடன் வெளிவரும்.

சிறந்த கேமரா மேம்பாடு

சிறந்த கேமரா மேம்பாடு

தவிர இதுவரை வெளியான நோக்கியா ஸ்மார்ட்போன்களை விட சிறந்த கேமரா மேம்பாடு மற்றும் வேறு சில புதுமையான கண்டுபிடிப்புகளும் நோக்கியா 9-ல் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நோக்கியா 9 ஆனது மொத்தம் ஐந்து பின்புற கேமராக்களுடன் வெளியாகுமென்று ஒரு அறிக்கை கூறுகிறது.

டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார்

டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார்

உடன் நோக்கியா 9 ஆனது ஒரு பெரிய முழு (நிச்சயமாக முழு திரை) மற்றும் டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவைகளை கொண்டிருக்கும், அதாவது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விவோ எக்ஸ்20 பிளஸ் யூடி ஸ்மார்ட்போனில் காணப்படுவது போன்றதொரு ரீடர் இடம்பெறலாம்.

வெளியீடு.?

வெளியீடு.?

இந்த தொலைபேசிகள் சாம்சங் கேலக்ஸி எஸ்9 போன்ற இதர பிளாக்ஷிப்ஸ் கருவிகளுக்கு கடும்போட்டியை உண்டாக்கும். வெளியீட்டை பொறுத்தவரை நோக்கியா 8 ப்ரோ ஆனது வருகிற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படலாம். மறுகையில் உள்ள நோக்கியா 9 ஆனது ஆண்டின் முடிவில் வெளியாகலாம்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
விலை.?

விலை.?

இதைத்தவிர வேறெந்த தகவலும் இப்போதுவரை இல்லையென்றாலும் கூட, நோக்கியா 9 ஆனது விட நோக்கியா 8 ப்ரோ ஸ்மார்ட்போனை விட அதிக விலை கொண்டதாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. மேலும் பல ஸ்மார்ட்போன்கள் பற்றிய உடனடி அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Nokia 8 Pro, Nokia 9 with Snapdragon 845 expected in second half of 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X