Home
Mobile

மிரட்டலான நோக்கியா 8 (இந்திய வெளியீடு, விலை & அம்சங்கள்).!

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் எப்போதான் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.?? என்ற கேள்விக்கு இதோ பதில்.!

By Muthuraj

"நோக்கியா ஸ்மார்ட்போன்ஸ் இந்தியாவுல எப்போ ரிலீஸ் ஆகுது..?" என்று கேட்காத நண்பர்களே இல்லை, அந்த அளவிலான எதிர்பார்ப்பபில் அத்துணை பேரும் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்காக காத்து கிடக்கிறார்கள்.

மிரட்டலான நோக்கியா 8 (இந்திய வெளியீடு, விலை & அம்சங்கள்).!

அவ்வாறே மறுபக்கம், நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம் பழைய மணம் மற்றும் பலம் மாறாத அதே மாதிரியான நோக்கியா கருவிகளை அறிமுகம் செய்து நம்பிக்கை அளித்த வண்ணம் உள்ளது. சரி, அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் எப்போதான் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.?? என்ற கேள்விக்கு இதோ பதில்.!

இந்தியாவில்

இந்தியாவில்

எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கு நெருக்கமான ஆதாரங்களின்படி சமீபத்திய நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் மறு வடிவமைக்கப்பட்ட நோக்கியா 3310 ஆகிய கருவிகள் வரும் ஜூன் மாதம் (அடுத்த மாதம்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்துகின்றன.

அதே மாதத்தில்

அதே மாதத்தில்

அதுவொருபக்கம் இருக்க இப்போது சில புதிய நோக்கியா சாதனங்களைப் பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நோக்கியா 6, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆகிய அக்கருவிகளின் உலக மாறுபாட்டை அறிமுகப்படுத்துவதோடு, அதே மாதத்தில் நோக்கியாவின் உயர் இறுதி கருவியான நோக்கியா 8 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகவுள்ளது.

23 மெகாபிக்சல்

23 மெகாபிக்சல்

இணையத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் அனைத்து வதந்திகளுக்கிடையில் புதிய வதந்தி ஒன்றின் கீழ் வரவிருக்கும் நோக்கியா 8 கருவியானது ஒரு 23 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் என்று கூறுகின்றன.

முதன்மை கேமரா

முதன்மை கேமரா

எனினும், வெளியான அறிக்கை "குறைந்த பட்சம்" என்று குறிப்பிடபட்டுள்ளதால் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் 23 மெகாபிக்சலை விட மிக அதிக அளவிலான முதன்மை கேமரா கொண்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம். உடன் இந்த ஸ்மார்ட்போன் கார்ல் ஜீஸ் லென்ஸ் இடம்பெறும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வெண்ணிலா ஆண்ட்ராய்டு

வெண்ணிலா ஆண்ட்ராய்டு

மேலும் நோக்கியா 8 ஆண்ட்ராய்டு சாதனமானது ஒரு வெண்ணிலா ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும் என்று முந்தைய அறிக்கை குறிப்பிடுகிறது.

விரைவான மேம்படுத்தல்

விரைவான மேம்படுத்தல்

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லெனோவாவின் மோட்டோ ஜி 5, ஜி 5 பிளஸ் மற்றும் எல்ஜி ஜி 6 போன்றே நோக்கியா 8 கருவியிலும் மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகளையும், ஆண்ட்ராய்டின் புதிய பதிப்புகள் மற்றும் கூகிள் ஏஐஎஸ் அசிஸ்டண்ட் ஆகியவற்றிற்க்கான விரைவான மேம்படுத்தல்களையும் எதிர்பார்க்கலாம்.

வெண்ணிலா

வெண்ணிலா

நோக்கியா தனது புதிய போன்களுக்கான பிரதான அம்சமாக வெண்ணிலா அதாவது ப்யூர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தனது நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஆகிய அனைத்திற்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீமியம்

பிரீமியம்

மேலும் வெளியான தகவலின் கீழ் நோக்கியா 8 ஆனது க்வால்காம் நிறுவனத்தின் சமீபத்திய செயலியான ஸ்னாப்ட்ராகன் 835 உடன் வரும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு மாறுபாடுகள் வரும் என்றும் அதில் ஒன்று மலிவான பதிப்பாக இருக்கும், இரண்டாவது ஒரு பிரீமியம் மாதிரியாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாறுபாடு

மாறுபாடு

அதாவ்து நோக்கியா 8 கருவியின் குறைந்த இறுதி மாறுபாடு ஒரு 5.2 அங்குல க்யூஎச்டிஅமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டும் மறுபுறம், நோக்கியாவின் உயர்-இறுதி மாதிரி 5.5 அங்குல டிஸ்பிளே கொண்டும் வெளியாகலாம்.

ரேம்

ரேம்

மேலும் நோக்கியா 8 கருவியில், கூகுள் டேட்ரீம் விஆர் பிளாட்பார்ம் ஆதரவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் கொண்டிருக்கும் மற்றும் வரவிருக்கும் இந்த நோக்கியா கருவியின் சேமிப்பை பொறுத்தமட்டில் சிறிய மாறுபாடு 128ஜிபியும் உயர் இறுதியில் பதிப்பு 256ஜிபியும் கொண்டிருக்கலாம்.

விலை

விலை

நோக்கியா 8 கருவியின் 5.2 அங்குல மாறுபாடு கிட்டத்தட்ட ரூ.37,220/- என்ற விலைக்கும் மறுபுறம், 5.5 அங்குல மாதிரி சுமார் ரூ.41,873/- என்ற விலைக்கும் விற்பனைக்கு வரலாம்.

உறுதிப்படுத்தும் வண்ணம்

உறுதிப்படுத்தும் வண்ணம்

ஒருவேளை நோக்கியா 8 ஆண்ராய்டு கருவியானது ஜூன் மாதம் வெளியாகவிட்டாலும் கூட முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியான நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் மறு வடிவமைக்கப்பட்ட நோக்கியா 3310 ஆகிய கருவிகள் ஜூன் மாதம் வெளியாவதை உறுதிப்படுத்தும் வண்ணம் "2017-ல் மேலும் அறிவிப்புகள் வெளி வரும்" மற்றும் "இது எங்களின் தொடக்கம் மட்டுமே" என்று நோக்கியா மொபைல்ஸ் ட்வீட் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia 8 with 23MP camera, Snapdragon 835 may launch in June: Report. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X