13எம்பி வெர்டிகல் டூயல் கேம்; 8ஜிபி ரேம்; மிரட்டலான நோக்கியா 8.!
நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஆனது கார்ல் ஸேய்ஸ் ஒளியியல் பயன்படுத்துதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் செங்குத்தான முறையில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் சமீபத்தில் அதன் இரண்டு சீரமைக்கப்பட்ட பீச்சர் அம்ச மொபைல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதன் மிகவும் எதிர்பார்க்கப்படும் தலைமை சாதனமான நோக்கியா 8 சார்ந்த வெளியீட்டை இன்னும் நிகழ்த்தவில்லை. ஆக, நோக்கியா 8 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சார்ந்த வதந்திகளுக்கு இன்னும் சில நாட்கள் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறாக தற்போது வெளியாகியுள்ள நோக்கியா 8 சார்ந்த லீக்ஸ் தகவலொன்று மிகவும் சுவாரசியமான ஒன்றாக தெரிகிறது. வெளியான தகவலின்படி, ஜூலை 31-ஆம் தேதி நோக்கியா 8 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கிறது உடன் கருவி சார்ந்த வடிவமைப்பு மற்றும் இதர விவரங்களையும் வழங்குகிறது. அதன்படி, நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஆனது கார்ல் ஸேய்ஸ் ஒளியியல் பயன்படுத்துதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் செங்குத்தான முறையில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

இரட்டை கேமரா அமைப்பு
பிரபல டிப்ஸ்டர் ஆன இவான் பிளாஸ் வெளியிட்டுள்ள இந்த லீக்ஸ் தகவலின் கீழ் நோக்கியா 8 சாதனத்தின் முன் மற்றும் பின் பகுதிகள் காட்சிப்படுகிறது. ஒரு நீல நிற மாறுபாட்டில் உலோக வடிவமைப்பில் உள்ள நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ஒரு செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பு காணப்படுகிறது.

ஸேய்ஸ் நிறுவனத்தின் கூட்டணி
நோக்கியா 8 கொண்டுள்ள லென்ஸ்கள் ஸேய்ஸ் பிராண்ட்டை சேர்ந்தவைகளாகும். இந்த மாத தொடக்கத்தில் எச்எம்டி க்ளோபல் மற்றும் ஸேய்ஸ் நிறுவனத்தின் கூட்டணி அறிவிக்கப்பட்ட பின் வெளியாகும் முதல் லீக்ஸ் தகவல் இதுவாகுமென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான புகைப்படத்தில், இரண்டு கேமரா லென்ஸ்கள், கீழே ஒரு பிளாஷ், மற்றும் லேசர் ஆட்டோ போகஸ் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பொத்தான்கள்
இரண்டு பக்க நேவிகேஷன் கொண்ட வன்பொருள் கொள்ளளவுகளுக்கான ஹோம் பொத்தான் ஸ்மார்ட்போனின் முகப்பில் உள்ளது. கருவியின் 3.5மிமீ ஆடியோ ஜாக் மேல் விளிம்பில் உட்கார்ந்திருக்கிறது மற்றும் ஸ்மார்ட்போனின் வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் சாதனத்தின் வலது விளிம்பில் அமைந்துள்ளதது.

ஸ்னாப்டிராகன் 835 செயலி
இதுவரை வெளியான தகவல்களில் இருந்து நோக்கியா 8 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், சில குறிப்பிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகளில் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட், 5.3 அங்குல க்யூஎச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 செயலி ஆகிய பிரதான அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

8 ஜிபி ரேம் மாறுபாடு
ஆரம்பத்தில் நோக்கியா 8 ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்புடன் துவங்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் மாறுபாடு ஆகிய வேரியண்ட்களில் வெளியாகலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில் இரண்டு 13 மெகாபிக்சல் பின்புற லென்ஸ்கள் சாத்தியமகலாம், மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் எதிர்பார்க்கப்படுகிறது. பரிமாணங்களில் 151.55x73.7 மிமீ இருக்க வேண்டும்.

நான்கு வண்ண விருப்பங்களில்
நோக்கியா 8 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் சார்ந்த விவரங்களில் இருந்து இக்கருவி சுமார் ரூ.43,400/- என்ற நிர்ணயம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா 8, நான்கு வண்ண விருப்பங்களில் - ப்ளூ, ஸ்டீல், தங்கம் / நீலம் மற்றும் தங்கம் / காப்பர் - கிடைக்கும்.


Click it and Unblock the Notifications