கோல்ட் காப்பர் வண்ண மாறுபாட்டில் நோக்கியா 8.?

|

நோக்கியா 8 பல்வேறு வண்ண மாறுபாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்கிற வதந்தி உண்மை என்பது போல தெரிகிறது. புகழ்பெற்ற டிப்ஸ்டர் இவான் பிளாஸ், நோக்கியா 8 ஸ்மார்ட்போனை ஆன்லைனில் முதலில் வெளியிட்டார். அந்த படத்தில் காட்டப்பட்ட சாதனம் பிளாக் வண்ண மாறுபாட்டில் இருந்தது.

அதே நாளில் அதே டிப்ஸ்டர் இன்னொரு நோக்கியா 8 படத்தை வெளியிட்டார். அந்த ஸ்மார்ட்போன் வேறு நிறத்தில் இருந்தது. அதாவது, அது சில்வர் மாறுபாட்டில் இருந்தது. அதற்கு பின்னர் எந்த விதமான நோக்கியா 8 வண்ண மாறுபாடு சார்ந்த தகவலும் வெளியாகாத நிலைப்பாட்டில் தற்போது மைட்ரைவர்ஸ்.காம் என்ற வலைத்தளத்தில் நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் மற்றொரு வண்ண மாறுபாடு சார்ந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கோல்ட் காப்பர் வண்ண மாறுபாட்டில் நோக்கியா 8.?

வெளிப்படையாக, இது ஸ்மார்ட்போனின் தங்க-காப்பர் மாறுபாடு ஆகும். பெரும்பாலும், முன்னர் கசிந்த மாடல்கள் போலவே தான் இந்த மாதிரியும் இருக்கிறது, உடன் சில சிறிய வேறுபாடுகள் உள்ளதையும் காண முடிகிறது.

உதாரணமாக, நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் தங்க-காப்பர் மாறுபாட்டில் செஸிஸ் லோகோ அதன் பின்புற கேமராக்களின் கீழ் இல்லை. மேலும், தொலைபேசியின் முகப்பு பொத்தானை நாம் முன்னர் பார்த்தவற்றுடன் ஒப்பிடும்போது மிகப்பெரியதாக உள்ளது. மற்றும் தயாரிப்பாளரைக் குறிக்கும் உரை இல்லை.

இது ஒரு முன்மாதிரி அலகாக இருக்கவும் சாத்தியம் உள்ளதை மறுக்க முடியாது அல்லது இது இன்னும் வளர்ச்சியில் இருக்கும் கருவியாக கூட இருக்கலாம். எனவே, நாம் பாதுகாப்பாக நோக்கியாவிடம் இருந்து எதிர்வரும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு காத்திருப்பதே நல்லது.

இந்த சமீபத்திய கசிவு உற்பத்தி வரியிலிருந்து வரும் தகவல் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இந்த படங்கள் தவறான ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. படங்களை பார்த்து, இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நோக்கியா 8 எனக்கூறப்படும் இதன் பின்புற பேனலில் கீறல்கள் நிறைய இருப்பதாய் காண முடிகிறது எனவே இது வெளியாகும் பட்சத்தில் பயனர்கள் அதை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia 8 now spotted in Gold-Copper color; have a look. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X