நோக்கியா 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இக்கருவி 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் கடந்தவாரம் நோக்கியா 8 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன்நோக்கியா 8 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது, இப்போது வந்த புதிய அறிவிப்பில் அக்டோபர் மாதம் இறுதியில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் பல தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன, மேலும் ஆப் மற்றும் விளையாட்டு போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.3-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.3-இன்ச் குவாட் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி டூயல் ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 13மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3090எம்ஏஎச்:
நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் 3090எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications